ஐகியூ( நுண்ணறிவு திறன்)டெஸ்டில் உலகின் மிகவும் புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டினை விஞ்சி லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
11 வயதான அர்னவ் ஷர்மா என்ற இந்திய வம்சாவளி மாணவர், கடந்த சில வாரங்களுக்கு முன் மிகவும் கடினமான இந்த மென்சா டெஸ்டில் எந்த வித முன் தயாரிப்பும் இன்றி 162 புள்ளிகளை உறுதி செய்துள்ளார். மிகப்பெரும் ஜீனிசியஸ் ஆன ஆல்பர்ட் ஐன்ஸ்டின் மற்றும் ஸ்டீபன் ஹாவ்கிங்கை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
ஐகியூ டெஸ்டில் அதிக புள்ளிகள் பெற்றது குறித்து மாணவர் அர்னவ் ஷர்மா கூறும் போது, “ மென்சா டெஸ்டானது மிகவும் கடினமானதாக இருந்தது. அதிகம் பேர் இதில்தேர்ச்சி பெற்றது இல்லை. எனவே தேர்ச்சி பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. 7 முதல் 8 பேர் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். ஒரு சில சிறுவர்களும் சில இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
நான் இந்த தேர்வுக்கு இரண்டரை மணி நேரம் எடுத்துக்கொண்டேன். எனது தேர்வு முடிவுகளை கேட்டு என் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்” என தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரியதும் பழமையானதாகவும் மென்சா ஐகியூ சொசைட்டி கருதப்படுகிறது.


0 Comments