ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கட்டாருக்கான விமான சேவைகளை இன்று நிறுத்திய கையோடு அந்நாட்டுக்கான சீனி ஏற்றுமதியையும் நிறுத்தியிருக்கின்றது. வருடாந்தம் ஒரு லட்சம் தொன் சீனியை கட்டார் ஐக்கிய அரபு எமிரேட்சிடம் இருந்து பெற்று வருகின்றது. இந்த நடவடிக்கையில் சவூதி அரேபியாவும் இணைந்து கொண்டு அந்த நாடும் கட்டாருக்கான சீனி ஏற்றுமதியை நிறுத்தியிருக்கின்றது.
இராஜதந்திரதொடர்புகளை துண்டித்த கையோடு பொருளாதார தடைகளையும் கட்டார் மீது கொண்டு வர இந்த நாடுகள் முயற்சிப்பதன் முதல் கட்டமே இது. ரமழான் மாதத்தில் மனிதாபிமான நடவடிக்கையின் பெயரால் சரி இந்த நாடுகள் கட்டார் மீதான பொருளாதார தடையை நிறுத்தியிருக்கலாம்.
சவூதி அரேபியாவின் தன்னிச்சையான முடிவும் தலையாட்டித்தனமான செயற்பாடும் விரைவில் மத்திய கிழக்கில் இரத்த ஆறு ஒன்றை ஓடச்செய்யும் நடவடிக்கையின் எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கிறது.
-R.MANAF-
0 Comments