Subscribe Us

header ads

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ அனைவரும் கைகோர்ப்போம். மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்


இலங்கையில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ அனைவரும் கைகோர்ப்போம் என்று மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது.
இயற்கை சீற்றத்தால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா கடற்கரையில் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அதில் இலங்கைக்கு உதவ அனைவரும் கைகோர்ப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட கைகளை உருவாக்கி, அதில் கண்ணீர் வடிக்கும் கண்களுடன் கோரிக்கை வாசகத்தை பதிவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments