Subscribe Us

header ads

வெள்ளத்தால் சேதமடைந்த பாதைகள் தொடர்பில் அறிவிக்கவும்- வீதி அபிவிருத்தி அதிகாரசபை

அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாதைகளை சீர்திருத்துவதற்கான திட்டமொன்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக களுத்துறை, காலி, மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ள பாதைகள் தொடர்பான தகவல்களை மாகாண பணிப்பாளர்கள் ஊடாக பெற்ற வண்ணம் உள்ளதாகப் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனுடன் அனர்த்தங்களால் சேதமான பாதைகள் தொடர்பான தகவல்களை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 1968 மற்றும் 1969 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்க முடியும் என அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments