கடந்த மூன்று தசாப்தங்களை அண்மிக்கும் பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாத தேசிய அரங்கில் அரசியல் அநாதையாக அடையாளப்படுத்தப்படும் புத்தளம் வாழ் சிறுபான்மை சமூகம் தமக்கான உரிமைகளை சலுகைகளை பெறுவதில் பாரிய பின்னடைவை கண்டு வருகிறது.
மாவட்ட பொது வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டிய புத்தளம் தள வைத்தியசாலை மாவட்டத்தின் ஏனைய தொகுதிகளின் பலம் வாய்நத அரசியல் தலைமத்துவங்களால் இடையூறு செய்யப்பட்டு, வைத்திய சுகாதார வசதிகளை நாடி தனியாரிடம் தஞ்சமடையும் போக்கினையே நமது தொகுதி மக்கள் கொண்டிருக்கிறார்கள்.
வைத்தியசாலை முதல் பாடசாலை, உள்ளூராட்சி சபை, பிரதேச சபை போன்ற அரச காரியாலயங்களில் நமக்காக வழங்கப்படும் தொழில் ஒதுக்கீடுகள் வெளிமாவட்ட அரசியல் அதிகாரங்களின் தலையீட்டினால் தட்டிப்பறிக்கபட்டு அவர்களது தொகுதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
போதாதைக்கு மீதொட்முல்ல குப்பை மலையை அருவக்காட்டுக்கு கொண்டு வரவும் பாதுகாப்பில்லாது வெடித்து விபத்ததாகிய ஆயுத கிடங்கும் கல்பிட்டி பிரதேசத்தின் இராணுவ முகாமுக்கு இடம் மாற்றுவதற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்படுகிறது.
புத்தளம் மாவட்டத்தில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் தாம் இழந்துள்ள வளங்களை மீளுருவாக்கம் செய்யாது, அரசாங்க உதவிகளை மட்டும் எதிர்பார்த்து பெரும்பான்மை அரசியல் தலைமைத்துங்களை தங்கிவாழும அரசியல் முகவர்களின் வாக்குறுதிகளை நம்பி வாக்குகளை சிதறடிக்காது ஒற்றமைப்படுவதையே வலியுறுத்துகிறார்.
புத்தளம் தொகுதிக்கான மீண்டுமொரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கௌரவ அமைச்சருமாகிய ரிஷாத் பதியுத்தீன் அவர்கள், பூர்வீக குடிகளினதும் இடம்பெயர் சமூகத்தினதும் அடுத்த தலைமுறைகள் எதிர்நோக்க போகும் சவால்களை சரியான புரிதலை உடையவராவார்.
அமைச்சரின் நிதியொதுக்கீட்டில் தையல் பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையங்களையும் 460 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவருத்திகளை ஆரம்பிக்கின்ற வைபவத்தின் போது "புத்தளம் மண்ணின் மைந்தர்கள் புத்தளத்தை ஆளவேண்டும், தமக்காக சதா உழைக்கின்ற தலைவர்களை கட்சி பேதமின்றி பிரதேச மக்கள் அவர்களை பலப்படுத்த வேண்டும்" என்பதையும் திடமாக வேண்டிக்கொண்டார்.
ஆளுமையும் தூரநோக்கும் கொண்ட புதிய இளம் தலைமத்துவங்களுக்கு புத்தளம் தொகுதி மக்களின் வரவேறபு அதிகரித்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை பகிர்கின்ற போதும் பதவிகளில் அங்கம் வகிக்கும் அல்லது முன்னாள் அதிகார தரப்பு மூத்த அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டு அனைவரும் விட்டுக்கொடுப்புக்களோடு புத்தளத்தின விடிவுக்காக பயணிக்க வேண்டியுள்ளது.
ஆனால் சிலர் இடம்பெயர்ந்த சமூகம் இங்கு வந்து 27 வருடங்கள் கடந்த பின்பு இன்று உரிமை கோசங்கள் பேசுவதையும் , அதனை தங்களின் அரசியலுக்கான அடித்தளமாக மாற்றுவதையும் காண்கிறோம்.
2004 ம் ஆண்டு தொடக்கம் 2010 ஆண்டு வரை பாராளுமன்றத்திலே இருந்தார்கள் மூன்று மாகாண சபை உறுப்பினர்களையும் உருவாக்கியதாக சொல்கிறார்கள் . அந்த பாராளுமன்ற உரிமையினையும் மாகாண சபை உறுப்பினர்களையும் வைத்திருந்த இவர்கள் அந்த காலக்கட்டத்தில் பாராளுமன்றிலும் இவர்களின் கட்சியிலும் இருந்த மர்ஹும் நூர்தீன் மஷூர் ஊடாக ஏன் எங்களது உரிமைகளை பேச தவறினார்கள் ? பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிடம் சென்று எங்களது கல்வி கோட்டாக்கள் விடயமாக ஏன் பேச தவறினார்கள் ?
இன்றும் இவர்களின் கட்சியிலே மன்னாரை பிரதிநிதித்துவம் செய்யும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் , முத்தலிப் பாவா போன்றோர் உள்ளார்கள். வட மாகாண சபை உறுப்பினர் ரயீஸ் இருக்கிறார் . வடக்கு மக்களின் கணிசமான வாக்குகளை பெற்ற வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் இருக்கிறார் ஏன் சமூக வலைத்தளங்களில் பேசும் இவர்களால் தீர்வு பற்றி பேச முடியவில்லை ?
இவைகளிலிருந்து விளங்குவது யாதெனில் இவர்களின் நோக்கம் மறைமுகமாக நமது கட்சியின் வளர்ச்சியை மட்டம் தட்டுவதும் நமது தலைமையின் செல்வாக்கை குறைப்பதுமேயாகும். அல்லது இவைகளை வைத்து எதிர்ப்பு தெரிவித்து சமாதானம் எனும் பெயரிலே வந்து ஒட்டிக்கொள்வதுமாகும்.
இப்படியான விடயங்களோடு சேர்த்து இன்று நாம் சிறுபான்மை சமூகத்தின் சுய தொழில் முயற்சிகள், கைத்தொழில் விரிவாக்கம், விவசாய உற்பத்திகள் போன்ற வாழ்வாதார முயற்சிகளுக்கும் கல்வி, சுகாதாரம், சகவாழ்வு, விளையாட்டு போன்ற துறைகள் பாரம்பரிய பிற்போக்கு நிலைமைகளிலிருந்து புத்தாக்கமான உருமாற்றத்தை அடைவதற்கு நமது தேசிய தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
இதுவரை எந்த அரசியல்வாதியாலும் ஒரு வீடமைப்பு திட்டத்தை கூட நமது தொகுதிக்குள் நடைமுறைப்படுத்த முடியாமலிருந்தது. ஆனால் நமது தலைவரின் ஒத்துழைப்போடு இன்று 1000 வீடுகளை அமைக்கும் பணியிலே நமது கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி ஹாஜியார் களமிறங்கியுள்ளார்.
நாம் அபிவிருத்திகளை ஆரம்பித்துள்ளோம், முடியாத சிலர் உரிமை கோஷமிட்டு மக்களை திசை திருப்புகிறார்கள். உரிமை என்றால் உரிமை அரசியலும் , அபிவிருத்தி என்றால் அபிவிருத்தி அரசியலும் நடத்த நம்மால் முடியும்.
இளைஞர் அமைப்பாளர்


0 Comments