Subscribe Us

header ads

பிரதியமைச்சர் ஹரீசின் தந்தையாரின் மறைவுக்கு றிஷாட் அனுதாபம்

ஊடகப்பிரிவு


பிரதியமைச்சரின் தந்தையாரின் மறைவு தனக்கு பெருங்கவலையளித்ததாக அமைச்சர் றிஷாட் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

சமூக சேவையாளரான முர்ஹூம் ஹரீசின் தந்தையார் கல்முனை மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவர். ஏழைகளுக்கும் தன்னிடம் உதவி நாடி வருபவர்களுக்கும் இல்லை என்று சொல்லாது வாரிவழங்கிய கொடைவள்ளலாக விளங்கியவர். சமூகத்தின் மீது எப்போதும் அக்கறையுடன் செயற்பட்டுவந்த அவர் சமூகப்பிரச்சினைகளை  தீர்த்து வைப்பதில் முன்னின்று உழைப்பவராக  விளங்கினார். அவரது புதல்வர் ஹரீஸ் தந்தையாரின் வழியில் சமூக வேவையில் ஈடுபட்டு பின்னர் அரசியலுக்கு வந்து தற்போது  மக்கள் பணி புரிந்து வருகின்றார். 

அன்னாரின் மறைவால் கவலையுறும் அவரது குடும் உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன். எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை வழங்குவானாக.

Post a Comment

0 Comments