நேபாளின் முதல் பெண் ஜனாதிபதியான பித்யா தேவி பந்தாரி சற்றுமுன் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேபாள ஜனாதிபதி இன்று காலை இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
14ஆவது ஐக்கிய நாடுகள் வெசாக் தின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இவர் வருகை தந்துள்ளார்.
சர்வதேச வெசாக் தினத்தின் நிறைவு நிகழ்வுகள், கண்டி தலதா மாளிகையின் மஹாமடுவ மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் நேபாள் ஜனாதிபதி பித்யா தேவி பந்தாரி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 Comments