Subscribe Us

header ads

ரஷ்ய நாட்டு காதலிக்காக குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கை காதலன்! விபரங்கள் உள்ளே...


ரஷ்ய நாட்டு காதலிக்காக குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கை காதலன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலிக்கான செலவினங்களை சமாளிக்கும் வகையில் திருட்டு மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி ஹபராதுவ பிரதேசத்திலுள்ள வைத்தியரின் வீடொன்றிற்குள் நுழைந்து குறித்த இளைஞன், நான்கு இலட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்ட தங்க நகைகளை திருடியுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
அதற்கமைய விசாரணை மேற்கொண்ட பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போது, தனது ரஷ்ய நாட்டு காதலிக்கான செலவுகளை மேற்கொள்வதற்காக இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments