ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்வியில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி நிகழ்வுகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து சிறப்பித்ததமை சுட்டிக்காட்டத்தக்கது.
கண்காட்சியை பார்வையிட இன்றைய தினத்தில் மாணவர்கள்,ஆசிரியர்கள்,துறைசார் ந்தோர்,பொதுமக்கள்,மற்றும் ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்கள் என ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.
அத்துடன் விவசாயத்திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நஞ்சற்ற உணவும் ,சூழலும்’ என்ற கண்காட்சியையும் கிழக்கு முதலமைச்சர் பார்வையிட்டார்,
அத்துடன் கண்காட்சிக்காக சிறந்த படைப்புக்களை முன்வைத்திருந்த மாணவர்களுக்கும் கிழக்கு முதலமைச்சர’ தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,





0 Comments