Subscribe Us

header ads

பொலன்னறுவை – ஹிகுரான்கொட பகுதியில் காதலால் ஏற்பட்ட சிக்கல் ஊருக்கே மின்சாரம் தடை.. விபரங்கள் உள்ளே...


பொலன்னறுவை – ஹிகுரான்கொட பகுதியில் உயரமான மின் கம்பம் ஒன்றில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபரை, கீழே இறக்க விமானப் படையினரின் உதவி கோரப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் முதல் குறித்த இளைஞர் இவ்வாறு போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
22 வயதான இந்த நபர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், இவரது எதிர்ப்பு நடவடிக்கைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதோடு, காதலில் ஏற்பட்ட சிக்கலே இதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகநபர் தரப்பில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த இளைஞரின் போராட்டத்தினால், நேற்று இரவு முதல் அப் பகுதிக்கான மின் இணைப்பை துண்டிக்கவும் மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Post a Comment

0 Comments