Subscribe Us

header ads

ஞானசாரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதனாலேயே அவர் தலைமறைவு. திலந்த வித்தானகே விளக்கம்


பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதனாலேயே அவர் தலைமறைவாகியிருக்கிறார் என திலந்த வித்தானகே தெரிவித்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து விசாரணைகளை காவல்துறையின் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் முதற்கட்டமாக பொதுபல சேனாவின் நிறைவேற்று அலுவலகர் திலந்த வித்தானகேவிடம் சிறப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் போது கருத்து வெளியிட்ட அவர், உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாகவே ஞானசார தேரர் தலைமறைவாகியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை, சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக செயற்பட்டமை குறித்தும், அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகத்தில் அவரின் பணிக்கு இடையூறு விளைவித்தமை போன்ற காரணங்களினால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டடிருந்ததுடன், அவரைக் கைது செய்ய காவல்துறையினர் முயன்றனர்.
இந்நிலையில் தான் அவர் தலைமறைவாகி இருந்து வருகின்றார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments