Subscribe Us

header ads

சமூக வலைத்தளங்களின் அரசனாக தொடர்ந்து விளங்கிவரும் பேஸ்புக் தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்கிறது


சமூக வலைத்தளங்களின் அரசனாக தொடர்ந்து விளங்கிவரும் பேஸ்புக் ஆனது தொடர்ந்தும் பல சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றது.
இவற்றின் தொடர்ச்சியாக Premium TV Shows எனும் மற்றுமொரு சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.
இதன்படி இச் சேவையானது அடுத்தமாதம், அதாவது ஜுன் மாத நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சேவை இரண்டு வகையாக வழங்கப்படவுள்ளது. அவற்றில் ஒன்று நீண்ட நேரம் கொண்ட ஒளிபரப்பு, சந்தா பெறுமதி அதிகமானது. மற்றொன்று ஒளிபரப்பு நீளம் குறைந்தது, சந்தா பெறுமதி அதிகமானது.
சுமார் இரண்டு பில்லியன் பயனர்களைக் கொண்ட பேஸ்புக் வலைத்தளத்தின் இந்த முயற்சியானது முன்னணி வீடியோ தளங்களான யூடியூப், Netflix, மற்றும் Amazon Video என்பவற்றிற்கு பெரும் போட்டியாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments