இரத்தினபுரி பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக சிக்கியிருந்த கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு அமைச்சர் தயாகமகே தனிப்பட்ட ரீதியில் ஹெலிகொப்டர் வசதி செய்து கொடுத்துள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி பிரதேசத்தில் இன்று ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயாகமகே கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அமைச்சருடன் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவொன்றும் தேவையான மருந்துப் பொருட்களுடன் சென்றிருந்தனர்.
இதன்போது இரத்தினபுரியின் கலவானை, அயகம பிரதேச மருத்துவமனைகளைச் சூழ வெள்ளம் மூழ்கடித்திருந்த நிலையில் அங்கு ஏராளமான கர்ப்பிணிகள் மற்றும் கடுமையாக சுகவீனமுற்றிருந்த நோயாளிளும் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து தனது தனிப்பட்ட ஹெலிகொப்டரைப் பயன்படுத்தி குறித்த கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை இரத்தினபுரி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதற்கு அமைச்சர் தயா கமகே நடவடிக்கை எடுத்திருந்தார்.
அத்துடன் கலவானைப் பிரதேசத்தில் துண்டிக்கப்பட்டிருந்த மின்சார வசதியை மீள ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மின்சார சபை ஊழியர்களையும் ரத்தினபுரியிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் ஏற்றிச் சென்றிருந்தார்.
அமைச்சர் தயாகமகேவின் இந்தப் பெருந்தன்மை குறித்து இரத்தினபுரி மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.




0 Comments