அண்மையில் அனைத்து முதலமைச்சர்களுக்குமான வருடாந்த மாநாடு ஹபரணையில் இடம்பெற்றிருந்தது,’
இந்த மாநாட்டின் போது ஏனைய மாகாண முதலமைச்சர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் யோசனைகள் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் ஏனைய முதலமைச்சர்களின் பாராட்டையும் பெற்றிருந்தது,
கிழக்கு முதலமைச்சரால் ஜனாதிபதியிடம் பிரத்தியேகமாக சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் முதலமைச்சர்கள் முன்னிலையில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் கோரிக்கைகளையே நாம் இப்போது ஆராயப் போகின்றோம்,
இதன் போது வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கான வழிவகைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் இதன் போது கோரிக்கை விடுத்தார்,
நாட்டின் கைத்தொழிற்துறையினை மேம்படுத்துவதுற்கு வாழைச்சேனை கடதாசி ஆலையின் பணி முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகின்றது,அத்துடன் தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு தொழில்களை பெற்றுக் கொடுத்க்கவும்,எமது நாட்டின் மனித வளங்கள் வௌிநாடுகளுக்கு செல்வதை கட்டுப்படுத்தவும்,தற்போது கடதாசி தொழிற்துறைக்கு வௌிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதற்கான நிதியை இந்த தொழிற்சாலையினை மீளத் திறப்பதன் ஊடாக கட்டுப்படுத்த முடியும் எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்,
அத்துடன் கிழக்கு மாகாணத்துக்கான தனியான முதலீட்டு சபையின் கிளையொன்று ஸ்தாபிக்கப்படுதல் அத்தியாவசியமனதொன்று எனவும் கிழக்கு முதலமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
தற்போது நாட்டில் உள்ள சுமுகமாக சூழ்நிலையினால் பல முதலீட்டாளர்கள் கிழக்கில் முதலீடு செய்ய நாட்டிற்கு வந்த போதிலும் அவர்கள் அதற்கான நடைமுறைகளை முன்னெடுக்க கொழும்பிற்கு செல்ல வேண்டியுள்ளது,அங்குள்ள பல நடைமுறைச்சிக்கல்கள் காரணமாக இடைநடுவில் தமது முதலீடு செய்யும் எண்ணத்தை கைவிட்டு திரும்ப வேண்டிய சூழ்நிலையும் உள்ளது,
எனவே கிழக்கில் முதலீட்டு சபையின் கிளையொன்று ஸ்தாபிக்கப்படுவதன் ஊடாக பல ஆரோக்கியமான முதலீடுகளை கிழக்கிற்கு பெற்று வேலைவாய்ப்பில்லாத பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என கிழக்கு முதலமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
கிழக்கு முதலமைச்சரின் இந்த யோசனையை பாராட்டிய ஜனாதிபதி இந்தத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அதற்குரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்,
இதேவேளை கிழக்கில் பதில் கடமை செய்யும் அதிபர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது,அவர்களுள் பலர் பதில் கடமை புரிபவர்களாக பல காலமாக சேவையாற்றி வருகின்றனர்,எனவே அவர்களின் பதவிகள் நிரந்தரமாக்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
மாகாண சபை உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி வேலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் போது சமனற்ற தன்மை காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது,எனவே இதனை நிவர்த்தி செய்யும முகமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 50 வீதத்தினையாவது ஒதுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்,
அத்துடன் இந்த வருடத்துக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த நிதியானது கடந்த ஆண்டை விட 51 வீதத்திற்கும் குறைவானதாகும் எனவே அந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும் என்பதுடன் இந்த ஆண்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இதுவரை வழங்கப்படாத நிலையில் அதனை வழங்க உடனடியாக ஆவண செயய் வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக் கொண்டார்,
மத்தியரசின் கீழ் உள்ள மாவட்ட விவசாயக் குழுவின் செயலாளர் பதவியினை மாகாண விவசாய அமைச்சின் சிரேஷ்ட விவசாய அதிகாரிக்கு வழங்குவதன் ஊடாக மாகாண விவசாய திணைக்களத்தின் பிரதேச மட்டம் மற்றும் கிராமிய மட்ட அதிகாரிகள் மூலம் குழுக்களை செயன்முறைப்படுத்தும் போது மிகவும் சிறந்த பலனை விவசாயிகளுக்கு வழங்க முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்,
கிழக்கு மாகாணத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவை வெற்றிடங்கள் 181 காணப்படுவதுடன் அவற்றை நிரப்புவதற்கு ஏதுவாக போதியளவு அதிகாரிகளை பதவியுயர்வு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.எதிர்காலத்தில கல்வி நிர்வாக சேவைக்கு ஆட்களை இணைக்கும் போது மாகாண மட்டத்திலான நடைமுறையொன்றை பின்பற்றுவதன் ஊடாக பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள அதிகாரிகளை நீண்ட நாட்களுக்கு தக்கவைத்துக் கொள்ள முடியும் என கிழக்கு முதலமைசசர் ஹாபிஸ் நசீர் கூறினார்,
அத்துடன் ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி வரை தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்ற யோசனையும் கிழக்கு மாகாண முதலமைச்சரால் முன்வைக்கப்பட்டது,
சிறுபிள்ளைகளுக்கு சமயம் சார்ந்த அறநெறி பாடசாலைகளுக்கு செல்வதற்கு (இஸ்லாம்,ஹிந்து,பௌத்தம்,கிறிஸ்தாவம் ) அனைத்து பிள்ளைகளுக்கு இந்த நேரத்தில் கட்டாயம் ஆக்குவதன் மூலம் ஒழுக்க விழுமியமுள்ள சமய அறிவுள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்க ஏதுவாக அமையும்,
சில மாகாண சபைகளால் இந்தத் திட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட போதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளமையினால் இதனை தேசிய ரீதியில் கொள்கையொன்றை உருவாக்கி அமுலப்படுத்துவதன் ஊடாக செயற்திறனுடன் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முடியும் என கிழக்கு முதலமைச்சர் கூறினார்,
அத்துடன் சகல பிரதேசங்களிலும் தீயணைப்புச் சேவை அலகுககள் ஸதாபிக்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார் இதனூடாக தீயணைப்பு அலகுககளை ஸ்தாபிப்பதன் ஊடாக பொது மக்கள் உச்சபட்ச நன்மையை பெற்றுக் கொள்ள முடியும் என கிழக்கு முதலமைச்சர் கூறினார்,
அத்துடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி மற்றும் ஆசிரியர் சேவைக்கு வேலையில்லா பட்டதாரிகளை உள்வாங்குவதன் ஊடாக மாகாண மட்டத்தில் செயற்திறன் மிக்க நிர்வாக சேவையை முன்னெடுக்க முடியும் என கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் எடுத்துரைத்தார்


0 Comments