மாத்தறை மேல் நீதிமன்றம் 16 வயதான சிறுவனுக்கு கடூழிய சிறை தண்டனை விதித்துள்ளது.
மொறவக்க பிரதேசத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு 3 வயது சிறுமியை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக சிறுவனுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மாத்தறை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
முன்வைக்கப்பட்ட வாதங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த, இந்த கொலை தவறுதலாக நடந்த கொலை என தீர்மானித்ததுடன் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
0 Comments