Subscribe Us

header ads

May 1st : அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது


அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைவாக மே முதலாம் திகதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பதற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது என நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் மதிய போசன இடைவேளையின் பின்னர் சபை அமர்வுகள் ஆரம்பமான போதே மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.
அவடைய அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும் மே முதலாம் திகதி மேதின நிகழ்வுகளுக்காக பஸ் வண்டிகள் பயணிப்பதற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அறவிடப்படும் கட்டணங்களை அன்றை நாள் மட்டும் கைவிடுமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
அதற்கமைவாக நாம் அன்றை தினம் இலவசமாக பயணத்தை மேற்கொள்ளவதற்கான அனுமதியை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

Post a Comment

0 Comments