CHANGE நிறுவனம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்திய புத்தளத்தின் சாதனைப் பெண் விருது 2016 நிகழ்வு இன்று மிக சிறப்பாக புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சமூக சேவை, கல்வி, அரசியல், சட்டம், ஊடகம், கலை இலக்கியம், பொருளியல் மற்றும் நிர்வாகம், ஜனரஞ்சக விருது போன்ற துறைகளில் சாதனை செய்த பெண்கள் இன் நிகழ்வில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.
CHANGE நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திரு தாவுதீன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் திரு. வன்னிநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், புத்தியாகம சந்த்ர ரதன தேரர் அவர்கள் உட்பட வடமேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ நியாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. இல்யாஸ், முன்னாள் நகரசபை உறுப்பினர் திரு. முஹ்சி, SLMC மாவட்ட அமைப்பாளர் திரு. ஜவ்பர் மரிக்கார் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டார்கள்.
WUSC நிறுவனத்தின் திரு. சுதர்சன் மற்றும் UNDP நிறுவனத்தின் திருமதி சுகன்யா, MWDT நிறுவனத்தின் திருமதி. ஜுவைரியா ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.
0 Comments