Subscribe Us

header ads

கொழும்பின் குப்பைகள் புத்தளத்துக்கு வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து, இன்னுமொரு மீதொட்டுமுல்லை அவலத்தை உருவாக்க வேண்டாம் – சம்பிக்க


புத்தளத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டுள்ள நவீன முறையில் குப்பைகளை சேகரிக்கும் இடத்தின் நிர்மாணப் பணிகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
புத்தளம் – அருவக்காறு பிரதேசத்தில் இதனை நிர்மாணிப்பதற்கான பணிகளை தமது அமைச்சு முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கொழும்பின் குப்பைகள் புத்தளத்துக்கு வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து, இன்னுமொரு மீதொட்டுமுல்லை அவலத்தை உருவாக்க வேண்டாம் எனத் தாம் கோரிக்கை விடுப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments