Subscribe Us

header ads

நண்பர்களை பிரிந்த சோகத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் தற்கொலை இலங்கையில்


வெளிநாட்டு பிரஜை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கடந்த 18ஆம் திகதி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
61 வயதுடைய ரஷ்ய நாட்டவர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.
மிரிஸ்ஸ உடுபில பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் ரஷ்ய நாட்டவர் தங்கியிருந்தார்.
தனது உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களை பிரிந்த சோகத்தில் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தார் என அவருக்கு நெருக்கமான நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இரவு இவர் விஷமருந்திய நிலையில் மாத்தறை வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி இவர் கடந்த 18ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments