Subscribe Us

header ads

கோரிக்கையை ஏற்காவிட்டால் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்போம்- விவசாயிகள் அறிவிப்பு -

(அஹமட் புர்க்கான்) 


கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்திய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போதும் அவர்களின் கோரிக்கையை இதுவரை அந்நாட்டின் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. 

அதைத்தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் முன் விவசாயிகள் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டவிடயம் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டும் அந்த ஏழை விவசாயிகளுக்கு இதுவரை அந்நாட்டு அரசு கோரிக்கையை ஏற்று அதற்கான நிவாரணம் வழங்கியதாக தெரியவில்லை. 

பி.ஜே.பி ஆட்சியின் அடக்குமுறையை கண்டித்து இந்திய மாநிலங்களில் பல போராட்டங்கள் நடந்துவரும் வேளையில் இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகளும் அடக்குமுறைகளும் அதிகமாக இதுவரை பிரதமர் மோடியின் ஆட்சியில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர் அதாவது அரசு தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளும் புனித இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளப் போவதாக இந்திய அரசுக்கு சவால் விடுத்துள்ளனர். 

இதிலிருந்து தெரியவருவதாவது பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்குடைய ஆட்சியை செய்து வருவதை தெளிவாக புரிந்து கொள்ளமுடிகிறது.

viduthalainews

Post a Comment

0 Comments