Subscribe Us

header ads

‘பேஸ்புக்’ நண்பர் ஒருவர் தன்னுடைய நண்பிக்கு செய்த கேவலமான செயல். விபரங்கள் உள்ளே...



மும்பையை சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ‘பேஸ்புக்’ மூலம் குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அறிமுகமானார். 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். மேலும் செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். இந்தநிலையில் குஜராத் தொழில் அதிபர் சம்பவத்தன்று மும்பை வந்து இருந்தார்.

இதையடுத்து திருமணமான பெண்ணும், தொழில் அதிபரும் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் சந்தித்தனர்.

அப்போது தொழில் அதிபர் காபி சாப்பிடலாம் என கூறி பெண்ணை பாந்திராவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றார்.

அங்கு அவர் திருமணமான பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து கற்பழித்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் கூறி புலம்பி உள்ளார். 

அவர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் ‘பேஸ்புக்’ நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Post a Comment

0 Comments