மாதம்பே கல்முருவ பிரதேசத்தில் நெல் வயலொன்றில் இருந்து கைக்குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனது மாடுகளை மேய்க்க சென்ற நபரொருவர் குழந்தையை கண்டுள்ள நிலையில் காவற்துறைக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
பின்னர் காவற்துறை முன்வந்து குறித்த குழந்தையை மீட்டு கல்முருவ மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , இன்று காலை இந்த குழந்தை பிறந்துள்ள நிலையில் 37 வயதான குழந்தையின் தாயாரால் இவ்வாறு நெல் வயலில் கொண்டு வந்து விடப்பட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கலமுருவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேகநபரான பெண் தற்போதைய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை என்னுடையது என அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் , குழந்தையை வளர்க்க முடியாத காரணத்தால் தான் இவ்வாறு குழந்தையை வயலில் விட்டு வந்தாக அந்த பெண் காவற்துறையினரிடம் கூறியுள்ளார்.
0 Comments