கேள்வி : உங்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் தாருங்கள் ?
( பெயர் , ஊர் , படிப்பு , வேலை )
பதில் : பெயர் M.N.M.FARHAN ஊர் புத்தளம் புழுதிவயல் க.பொ.த உயர்தரம் கற்றுவிட்டு தற்போது FinePix Studio & video creation என்ற பெயரில் கலையகம் (Studio) ஒன்று நடத்தி வருகின்றேன்.
கேள்வி : குறும்படம் இயக்கும் போது ஒளிப்பதிவாளராக இயங்க வேண்டும் என்ற ஆர்வம் எப்போது தோன்றியது?
பதில் : உயர்தரம் கற்கும்போதே புகைப்படம் எடுக்கும் ஆர்வம் சதாரணமாய் இருந்தது. அது மட்டுமல்லாமல், அரச மற்றும் அரச சார்பற்ற இளைஞர்கள் பயிற்சி பட்டறைகளுக்கு செல்லும் பழக்கம் என்னிடம் இருந்தது. அங்கு செல்லும் போதெல்லாம் எம்மை உற்சாகப்படுத்த பல சமூக விழிப்புணர்வுக்கான குறும்பட காணொளிகளை காட்டுவார்கள். அன்றிலிருந்து விழிப்புணர்வுகளுக்கான காணொளிகளை YOUTUBE யினுாடாக பார்க்கும் பழக்கத்தை பழக்கி கொண்டேன். அதுமட்டுமில்லாமல் இலங்கையில் பல பாகங்களில் தமிழ் பேசும் நண்பர்கள் சமூகத்திற்கு கருத்து சொல்லும் குறும்படங்களை படங்களை தயார்படுத்தும் முறைகளையும் கண்டு உள்ளேன் அச்சமயத்தில் தோன்றிய ஆர்வம்தான் இன்று ஒரு எட்டும் உயரத்தை பிடித்துள்ளேன்.
கேள்வி : உங்களை ஒளிப்பதிவாளராக இயக்க தூண்டிய ஒரு காரணி ?
பதில் : மேலே கூறியவாறு ஆர்வம் இருந்தது அன்றே! இருந்தாலும்
எமது ஊரைப்பொறுத்த வரையும் ஒத்துழைப்பும் எனக்கு இருக்கவில்லை அத்தோடு அதற்கான கருவிகளும் என்னிடம் இருக்கவில்லை. இருந்தாலும் எனது வாழ்க்கையிலும் சக மனிதர்களுக்கு சமூகத்தில் ஏற்படும் துன்பங்கள் எனக்கு நேறிட்டது ( போதைப் பாவனையாளர்கள், ஏமாற்றும் நண்பர்கள், உறவுகள், பணம்) இவைகளை கருப்பொருளாக என்னி அன்றே தீர்மானித்தேன் இவைகளில் இருந்து நாம் எப்படி தப்ப வேண்டும். அதை எவ்வாறு கையாள வேண்டும் அதில் இருந்து உறுவாகிய என்னம் தான் குறும்படங்களினூடாக மற்றும் புகைப்படங்கள் ஊடாக சமூகத்திற்கு தெளிவு படுத்த வேண்டும் என்று.
எமது ஊரைப்பொறுத்த வரையும் ஒத்துழைப்பும் எனக்கு இருக்கவில்லை அத்தோடு அதற்கான கருவிகளும் என்னிடம் இருக்கவில்லை. இருந்தாலும் எனது வாழ்க்கையிலும் சக மனிதர்களுக்கு சமூகத்தில் ஏற்படும் துன்பங்கள் எனக்கு நேறிட்டது ( போதைப் பாவனையாளர்கள், ஏமாற்றும் நண்பர்கள், உறவுகள், பணம்) இவைகளை கருப்பொருளாக என்னி அன்றே தீர்மானித்தேன் இவைகளில் இருந்து நாம் எப்படி தப்ப வேண்டும். அதை எவ்வாறு கையாள வேண்டும் அதில் இருந்து உறுவாகிய என்னம் தான் குறும்படங்களினூடாக மற்றும் புகைப்படங்கள் ஊடாக சமூகத்திற்கு தெளிவு படுத்த வேண்டும் என்று.
கேள்வி : நீங்கள் ஒளிப்பதிவாளராக மற்றும் இயக்க முற்பட்ட முதல் குறும்படம் ஞாபகம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதைப்பற்றி சிறிது விளக்கம்?
பதில் : ‘’வா போவோம்’’ எனது நண்பன் இஜ்ரானின் கதை இயக்கத்திலும் எனது ஒளிப்பதிவு, ஒளித்தொகுப்பிலும் எமது ஊர் சிறார்களைக்கொண்டு இக்குறும்படத்தை உருவாக்கினோம்.. எனினும் சில தனிப்பட்ட காரனங்களினால் அதை இணையத்தில் வெளியிட முடியாமல் போனது..
கேள்வி : உங்கள் ஒளிப்பதிவை பார்த்து முதலில் நன்றாக இருக்கின்றது என பாராட்டியது யார் ?
பதில் : புத்தளத்தைச் சேர்ந்த ஹிசாம் ஹுசைன் நாடக கலைஞர், எழுத்தாளர், வடிவமைப்பாளர், மொழிப்பெயர்ப்பாளர் அவர்கள் மற்றும் எனது முகனூல் நண்பர்கள்.
கேள்வி : உங்களுக்கு எப்டியான படங்களில் ஒளிப்பதிவாளராக இயங்க பிடிக்கும்?
பதில் : இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி அவர்களின் படங்கள் (அப்பா.சாட்டை,கொளஞ்சி,நிமிர்ந்து நில்,அம்மா கணக்கு) இது போன்ற சமூகத்திற்கு கருத்து சொல்லும் படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் மற்றும் குறும்படங்களுக்கான வாய்ப்பு கிடைத்தாலும் நிச்சயமாக பனியாற்றுவேன் அதுமட்டுமில்லாமல் நல்ல கதைகள் கிடைத்தாலும் அதிலும் தடம் பதிப்பேன்.
கேள்வி : நீங்கள் ஒளிப்பதிவாளராக மட்டும் ஒரு குறும்படத்தை தாங்களாவே எழுதி இயக்கி உள்ளீர்கள் அதன் அனுபவத்தை பற்றி (நேயர்களுக்காக)?
பதில் : நான் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்து வெளிட்ட முதல் குறும்படம் வெட்டுக்கிழி ஆகும். அதற்கு முன்பு சில குறும்படங்களில் பணியாற்றி இருந்தேன். பார்ப்பவர்களுக்கு வித்தியாசமாகவும், விருவிருப்பாகவும் இருக்க வேண்டும் மற்றும் ஒளிப்பதிவு துறையில் என்னை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பற்காக இவ்வாரான thriller கதை ஒன்றை தயாரித்தேன்..
( Direction, Screenplay, Camera, Editing)
கேள்வி : உங்கள் ஒளிப்பதிவுகளுக்கு கிடைத்த மிக பெரிய பாராட்டு அல்லதுபரிசு?
பதில் : நான் திரைக்கதை வசனம் எல்லாவற்றையும் இயக்கிய “வெட்டுக்கிளி” குறுந்திரைப்படம் ஊடாக இலங்கையின் பிரபல்யாமான NETHRA TV நிகழ்ச்சி FILM FESTIVAL நிகழ்ச்சியினூடாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது மட்டுமில்லாமல் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி இருந்தேன்.
01. வடமேல் மாகாண அரச கலை விழா - 2016 ஒளிப்படப் போட்டியில் வர்ணம் பிரிவில் எனது ஒளிப்படம் 3ம் இடம்.
01. வடமேல் மாகாண அரச கலை விழா - 2016 ஒளிப்படப் போட்டியில் வர்ணம் பிரிவில் எனது ஒளிப்படம் 3ம் இடம்.
கேள்வி : நீங்கள் இயக்கிய “வெட்டக்கிளி” குறும்படத்தில் உங்களின் சுய முயற்சியில் ஒளிப்பதிவாளராக இயக்கிய போது இருந்த அனுபவம் பற்றி?
பதில் : எனது சொந்த ஊரான புழுதிவவயலில் இருக்கும் சில இயற்கை காட்சிகளை ரசிகர்களுக்கு காட்டும் விதத்தில் கதைக்கருவை அமைத்தேன்.. இக்குறும்படத்தில் நடித்தது சிறுவர்களாக இருந்ததால் அனைத்து படப்பிடிப்பு வேலைகளையும் இலகுவாக மேற்கொள்ள முடிந்தது. அத்தோடு நண்பன் கஜனந்த சர்மா, ஹிசாம் ஹுசைன் ஆகியோரது பங்களிப்பும் அதிகம் உண்டு.
கேள்வி : ஒளிப்பதிவுகளுக்கென மற்றும் கதைகள் எழுதுவதற்கு குறித்த நேரம் வைத்துள்ளீர்களா ? அல்லது தோன்றும் போது குறித்து வைத்துக் கொள்வீர்களா ?
பதில் : மனதில் தோன்றும்போது இத்துறையின் ஆர்வம் உள்ள எனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறி அத்திட்டத்திற்னு சில நேரங்களை ஒதுக்கி கதைகளை மெருகூட்டுவேன்.
கேள்வி : சமகாலக் ஒளிப்பதிவாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள்?
பதில் : பிரியன் , P. C. Sreeram
கேள்வி : உங்களுக்கு சினிமாவில் ஒளிப்பதிவாளராக ஆகும் சந்தர்பம் வந்தால் என்ன செய்வீர்கள்?
பதில் : என்ன இப்படி ஒரு கேள்வி? வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் சாதிப்பேன்.
கேள்வி : வாழ்கையின் இலக்கு என்ன?
பதில் : இத்துறையில் எனக்கென தனி ஒரு பெயர் இலங்கையில்..
கேள்வி : இத்துறையில் சாதிக்கவிரும்பும் இளம் வயதினருக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்?
பதில் : எமது சமூகத்தை பொருத்த வரையில் இத்துறையை குறைத்தே இடைபோடுகிறார்கள்.. ( போட்டோ புடிக்கிறவர், வீடியோ எடுக்கிரவர் ) அவ்வலவுதான்… சாதிக்க வேண்டும் என்ற என்னம் இருக்கின்றவர்கள் தொடர்ந்தும் முயற்ச்சி செய்யுங்கள்.. என்றோ ஒரு நாள் இத்துறையில் உயர்ந்து இருப்பீர்கள்.
கேள்வி : உங்கள் அடைவுகளுக்கு குடும்பத்தினர் எவ்வாறு ஊக்கம்அளித்தனர்.
பதில் : முடியாது, இது வீன்வேலை என்று சொன்ன அவர்களின் வார்த்தையே இத்துறையில் இவ்வளவு தூரம் பயனிக்கச்செய்தது..
கேள்வி : இளம் வயதில் சிலஅடைவுகளை தொட்டுவிட்டீர்கள். இதற்கு திறமை தவிர வேறு எது காரணங்கள் இருக்கின்றனவா?
பதில் : இறைவனின் அன்பு, நண்பர்களின் ஊக்கம் மற்றும் எனது முயற்ச்சி..
கேள்வி : இலங்கைக் கலைஞர்களை இலங்கை இரசிகர்கள், வாசகர்கள் வரவேற்பளிப்பதில்லை என்ற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?
பதில் : தற்போதைய காலங்களில் அதிகம் வரவேற்கின்ரார்கள் என்பதே எனது கருத்து..
கேள்வி : தொடர்ந்தும் உங்கள் படப்புக்களுக்கு ஊக்கமும், பாராட்டக்கூடியதுமான உங்கள் நெருக்கமான நண்பர்கள் இருக்கின்றார்களா? யார்?
பதில் : ஆம்… எனது அன்பான மனைவி அனைத்து தோல்விகளிலும் என் வலது கையாக நின்று என்னை முன்னோக்கி வழி நடத்தியவர்.
நான் வேலை செய்த குறும்படங்களின் தொடுப்பு
Sweety - ( Camera)
நன்றி
Muthaliyam ( Camera, Editing ) M.N.M FARHAN
Pesa marantha varthai- ( Camera, Editing )
vetruppathai- ( Camera )
Ammavin pareetchai- ( Camera, Editing )
Antha 4 per - ( Camera, Editing )
clean puttalam - ( Camera )
Nilaimatram - ( Camera, Editing)
நன்றி
குறிப்பு : நேர்காணலின் தொகுப்பு கற்பிட்டியின் குரல் நிருபர் (Mohamed Jeezan)
0 Comments