Subscribe Us

header ads

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் பேருந்தில் வீடு சென்ற சம்பவம் மாத்தளையில்


மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் அரச வாகனங்கள் மற்றும் ஆவணங்களை முறையாக கையளித்து விட்டு பேருந்தில் ஏறி வீடு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
33 ஆண்டுகளாக அரச சேவையில் இருந்து வந்த குமாரசிறி என்பவர், மாத்தளை மாவட்ட செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் நேற்றைய தினம், மாத்தளை மாவட்ட செயலகத்திற்கு வந்த அவர், அதிகாரபூர்வ அரச வாகனம் மற்றும் ஆவணங்களை கையளித்து விட்டு, பிரியாவிடை பெற்றுள்ளார்.
இதனையடுத்து, குமாரசிறி பேருந்தில் ஏறி வீடு சென்ற சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment

0 Comments