Subscribe Us

header ads

கல்முனை ஸாஹிராவின் புதிய அதிபராக எம். எஸ். முஹம்மட் நியமனம்

(எம்.எஸ்.எம். ஸாகிர்)


கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக மீராசாஹிபு முஹம்மட் நியமனம் பெற்றுள்ளார்.

இம்மாதம் 05ஆம் திகதி புதன்கிழமை தனது கடமைகளைஆசிரியர்கள் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1978 ஆம் ஆண்டு 11ஆம் மாதம் 01ஆம் திகதி சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் வித்தியாலயத்தில் ஆசிரியராக இணைந்து கொண்ட இவர்பின்னர் மாவடிப்பள்ளி அல் - அஷ்ரப் மகாவித்தியாலயம்சாயந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயம்சாய்ந்தமருது றியாழுல் ஜன்னா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பணியாற்றி, 1995ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு மாற்றம்  பெற்றுஅன்று தொடக்கம் சிரியராகஉதவிப்பகுதித்தலைவராகபகுதித்தலைவராகஉதவி அதிபராகபிரதி அதிபராக பதவி வகித்து தற்போது அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராக விளங்கிய இவர்பதவி உயர்வு பெற்று அதிபர் சேவையில் 2009 இல் இணைந்து கொண்டார்.  அதிசிறந்த உயர்தர பெறுபேறுகளைப் பெற்று பல சாதனையாளர்களையும்நற்பிரசைகளையும் உயர் கல்விமான்களையும் வருடா வருடம் உருவாக்கிவரும் இக் கல்லூரிஅதிபர்களின் வரலாற்றில் இவர் 30ஆவது அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வரலாறுகளில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் இப்பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்கள் நாட்டின் நாலா புறங்களிலும் கடல் கடந்து வெளிநாடுகளிலும் சிறந்த தொழில்களில் பணியாற்றுகின்றனர்.

நான்கு மாணவர்களுடன் ஓர் அதிபரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில்தற்போது 160க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.  ஏறத்தாள 2600க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர்.

நீண்டகால ஆசிரியர் சேவையில் பணிபுரியும் புதிய அதிபரின் சேவை சிறப்பாக அமைய வேண்டுமென ஆசிரியர்கள்மாணவர்கள்பெற்றோர்கள்நலன்விரும்பிகள்கல்விச்சமூகம் எனப் பலரும் தமது வாழ்த்துக்களையும்பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இவர்மீராசாஹிபு மற்றும் பரீதா உம்மாவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.   

Post a Comment

0 Comments