Subscribe Us

header ads

பொருட்கள் கடைக்கு செல்லும் இலங்கை மக்களுக்கும் வைத்தியர்கள் விடுக்கும் எச்சரிக்கை அதிகம் பகிரவும்


இந்த நாட்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கில் கடைகளுக்கு செல்வதனை தவர்த்துக் கொள்ளுமாறு மக்களுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் பரவும் வைரஸ் தொற்றில் இந்து தப்பித்துக் கொள்வதற்காகவே, விசேட வைத்தியர் காந்தி நாணயக்கார மக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளளார்.
குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு பிள்ளைகள் மற்றும் நீண்டகால நோய்களில் (சக்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு) பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த வைரஸ் தொற்றினால் இலகுவாக பாதிக்கப்படக் கூடும் என்பதனால் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வைரஸ் தொற்று எந்தவொரு இடத்திலும் காணப்படும் என்பதனால், சவர்க்காரம் பயன்படுத்தி தொடர்ந்து கைகளை கழுவுவதன் ஊடாக வைரஸ் தொற்றுவதனை குறைத்துக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
முகம் மற்றும் வாய்களை சுத்தமற்ற கைகளினால் பிடிப்பதனால் இந்த வைரஸ் இலகுவாக சுவாசப்பாதை வழியாக நுழையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டு காரணமாக தமது சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும். கர்ப்பிணி தாய்மார்கள், சிறு பிள்ளைகள், நீண்ட நாள் நோயாளிகள் மற்றும் வயோதிபர் இந்த நபர்களுக்கு மத்தியில் செல்லாமல் மாற்று நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அவர் மக்களை கேட்டுள்ளார்.

Post a Comment

0 Comments