பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான காரணத்தை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பெண்கள் வாகனம் ஓட்டுவதால் வாகன நெரிசல் ஏற்படுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ராஜகிரியவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட போக்குவரத்து திட்டம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
பகல் நேரங்களில் பாடசாலைகள் நிறைவடையும் காலப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு பெண் சாரதிகள் தான் பிரதான காரணமாகியுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்த போக்குவரத்து திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பகுதியில், குறித்த திட்டம் மார்ச் மாதம் 12ம் திகதியில் இருந்து 19ம் திகதி வரை செயற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


0 Comments