Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (ஐடி என்பது பொய்டி) கவிதை தொகுப்பு.


பரமசிவனின் ஐடியிலே
பாம்பு கேட்டது
கருடா ஹவ் ஆர் யூ?
யாரும் சொந்த ஐடியில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே
கருடன் சொன்னது -அதில்
அர்த்தம் உள்ளது

சொந்தப் பெயரில் ஐடி வைத்து
ஷெல்பி போடும் பெண்கள் - 
எந்தப் புற்றில் பாம்பிருக்கும்
என்று அறியார் பாவம்.
அதிகம் பேர் கொமண்ட் செய்து
ஆஹா ஓஹோ என்பார்.
விதி வாழ்வில் விளையாடும்
வேறு வடிவத்தில் - பெண்
ஷெல்பி என்பது - fb
தொல்லை தருவது

பேக்ஐடி கூட்டத்திலே இருக்கும் பெண்கள் பலபேர்
பிறர் தொல்லை தவிர்ப்பதற்காய்
பிள்ளை பேரில் இருப்பார்.
இது போன்ற பேக் ஐடி
இல்லை இதில் தவறு.
ஏமாற்றும் பேக் ஐடி
இழிந்து கெட்டது. - அடி
ஐடி என்பது -பல
பொய்டி நம்பாதே.

பெண்டிரோட ஐடியிலே இருக்கும் பேக் ஆண்கள்.
தண்ட பெயரைச் சொல்வதற்கே
தகுதியில்லா வீண்கள்.
சைக்கோவில் ஒரு வகையாய்
இருப்பார்கள் இவர்கள்
பொய் சொல்லி ஏமாற்றும்
போலி மனிதர்கள் -இதில்
போலி என்பது -அடி
மூளை கெட்டது

Post a Comment

0 Comments