சர்ச்சைக்குரிய வில்பத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணும்பொருட்டு குறித்த பிரதேசத்துக்கு சென்று பார்வையிடுமுகமாக தலைவர் ஹக்கீம் தலைமையில் இன்று காலை முசலி பிரதேசசபை மண்டபத்தில் அது பற்றிய கலந்துரையாடலுடன், விளக்க உரையும் இடம்பெற்றது.

இதனை குழப்புவதற்கு அமைச்சர் ரிசாத்தின் ஆதரவாளர்கள் பலர் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வரவளைக்கப்பட்டிருந்தார்கள். பதற்ற நிலை ஒன்று உருவாக்கி இறுதியில் குழப்பம் செய்ய முற்பட்டவர்கள் தோல்வியடைந்து கலைந்து சென்றார்கள்.

அதனை தொடர்ந்து பிரச்சினைக்குரிய வன பிரதேசத்துக்கு செல்வதற்கு ஆயத்தமான நிலையில் அங்கு செல்வதில் பாதுகாப்பு பிரச்சினை உள்ளதாகவும், அங்கு ஆபத்து காத்திருக்கின்றது என்று கூறி பாதுகாப்பு தரப்பினர்கள் தயக்கம் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

அப்பிரதேசத்தை சேர்ந்த சில பொலிஸ் அதிகாரிகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதனால் வன பிரதேசத்துக்கு சென்றால் அங்கு ஆபத்து உள்ளது என்று பயம் காட்டி அங்கு அழைத்துச்செல்ல தயக்கம் காட்டுகின்றார்கள்.

ஆனால் மரணித்தாலும் பருவாயில்லை குறித்த இடங்களுக்கு சென்றுதான் ஆகவேண்டும் என்பதில் தலைவர் ஹக்கீம் அவர்கள் பிடிவாதமாக உள்ளார். அத்துடன் பொலிசாரின் பரிதாப நிலையினைக்கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் பொலிஸ்மா அதிபருடன் தொடர்புகொண்டு விடயத்தினை விளங்கப்படுத்தியதுடன் என்ன ஆனாலும் சரி குறித்த இடங்களுக்கு சென்றுதான் ஆகவேண்டும் என்ற நிலையில் தலைவர் ஹக்கீம் அவர்கள் வன பிரதேசத்துக்குள் செல்ல தயாராகின்றார்.


இங்கே கேள்வி என்னவென்றால் அங்கு இந்த குழுவினர்கள் செல்வதனை ஏன் தடுக்க வேண்டும்? இவர்கள் அங்கு செல்வதனால் உள்ள பிரச்சினை என்ன? பிரச்சினைக்கு தீர்வு காண்பதனை அமைச்சர் விரும்பவில்லையா? அப்படி என்றால் அங்கு ஏதோ புதையல் இருக்கின்றது. அதனால்தான் அமைச்சர் ரிசாத் தடுக்கின்றார் என்று அங்குள்ள அதிகாரிகள் கூறிக்கொள்வதனை காணக்கூடியதாக உள்ளது.          

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது