Subscribe Us

header ads

“வரப்பிரசாதம்” இனி வரும் காலங்களில் சவுதியிலும் க்ரீன் கார்ட்


சவுதி அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யவுள்ள “கீறீன் கார்ட்” (வெளிநாட்டவருக்கான சவுதி பிரஜாவுரிமை) செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவுதி பிஜையொருவருக்கு கிடைக்கும் பயன்கள் பல இந்த கிறீன் கார்ட் உரிமையாளருக்கு கிடைக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, சவுதி பிரஜையொருவருக்கு உரிமையில்லாத வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்கு, இந்த கிறீன் கார்ட் உரிமையாளர் வருடாந்தம் 14200 ரியாலை வருடாந்த சவுதி அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.
இந்த நிபந்தனைகளுக்கு உடன்படும் வெளிநாட்டவர்களுக்கு, நிரந்தர வசிப்பிடத்தை பெற்றுக் கொள்ளவும், சொத்துரிமைகளை வைத்திருக்கவும் சந்தர்ப்பம் அளிக்கப்படவுள்ளது.
இது தவிர, தன்னுடைய வியாபார நிறுவனமொன்றை ஆரம்பிக்கவும், ஓய்வுதியம், அரசாங்கத்தினால் வழங்கப்படும் சுகாதார கொடுப்பனவுகள், கல்வி என்பனவற்றை பெற்றுக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும். தொழில்களை மாற்றிக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
இந்த சேவைகள் தவிர, தமது குடும்ப உறுப்பினர்களுக்கு அவசர வீசா வழங்கவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. பணிப்பெண்களுக்கான வீசா இரண்டை விநியோகிக்கவும் இந்த கிறீன் கார்ட் உரிமையாளருக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments