Subscribe Us

header ads

அதிக விபத்துக்களுக்கு பாதசாரிகளின் கவனயீனமே காரணம்- சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி

பாறுக் ஷிஹான்


அதிமான வீதி விபத்துக்களுக்கு பாதசாரிகளின் கவனயீனமே முக்கிய  காரணமாக அமைவதாக  சுன்னாகம்  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.செல்வக்குமார்  தெரிவித்தார்.

சுன்னாகம் பகுதியில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

 இளைஞர்களிடத்தே ஓரளவு வீதி சமிக்கைகள் தொடர்பில் தெரிந்திருந்தாலும்  விபத்துக்கள் இடம்பெறுவதற்கு அவர்களின் நடத்தையும் பாதசாரிகளின் செயற்பாடும்   முக்கிய  காரணமாகின்றது.

சுன்னாகம்  பொலிஸ் பிரிவில்  நாளாந்தம்  ஏதோ ஒரு பகுதிகளில் விபத்துக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

 அவற்றில் 25வீதமானவை அவதானம்   குறைவான வாகன ஓட்டம்   25வீதமானவவை போக்குவரத்து விதிமுறையினை பின்பற்றாமை  மேலும் 50 வீதமான விபத்துக்கள் பாதசாரிகளினால் ஏற்படுகின்றன.

 குறிப்பாக 75வயதிற்கு மேற்பட்ட முதியவர் அதிகளவில் விபத்துக்களினால் காயமடைகின்றனர். இவ்வாறு இடம்பெறும் விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு பாடசாலை மாணவர்கள் மட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 மேலும் முச்சக்கரவண்டி சங்கம் தனியார் சிற்றூர்தி சங்கங்கள்  ஊடாக இவ்வாறான  விழிப்புணர்வு  செயற்பாடுகள் மூலம் வீதி  விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கையில் போக்குவரத்து பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 பிரதான வீதிகளை  அண்மித்த பாடசாலைகளிற்கு முன்னால்  போக்குவரத்து கடமைக்கு பொலிஸார் அதிகளவில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 குறிப்பாக  காலை பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்னரும் பின்னர் பாடசாலை முடிவுறும் நேரத்தில்  அவர்கள்  கடமையில் ஈடுபடுவார்கள்.

 எனவே நாம் வாகன சாரதிகள் மற்றும் பதாசாரிகளினை கேட்டுக்கொள்வது என்னவெனில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள்.

 குடிபோதையில் வாகனம் செலுத்துவதனை தவிர்க்கவேண்டும். கவனயீனமாக சாரத்தியம் பெறுமதிமிக்க உங்கள் அவயங்கள் இழப்பதற்கு காரணமாக அமைந்து விடுவதுடன் வீணான உயிரிழப்பினை ஏற்படுத்தி விடுகின்றது.

அத்துடன்  மோட்டார் சைக்கிள் செலுத்துவர்கள் எப்பொழுதும் 40கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்யுங்கள்இ விபத்து ஏற்பட்டாலும் சேதங்கள் குறைவாகவே அவை  அமையும் என மேலும்  தெரிவித்தார்.

Post a Comment

0 Comments