Subscribe Us

header ads

தியாகத்தால் வளர்க்கப்பட்ட கட்சியை அழிக்க முடியாது மு.கா பிரதித் தலைவரும் முதல் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் முழக்கம்.


தையல் இயந்திரங்களைக் கொடுத்து வாக்குகளைப்  பெறும்  நோக்கில்  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக்கப்படவில்லை என கட்சியின்பிரதித்தலைவரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்  தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிங்களின் அரசியல் உரிமைகளை  வென்றெடுக்கும் ஒரே நோக்கிலேயே  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மறைந்த தலைவர்மர்ஹும் அஷ்ரப்அவர்கள் உருவாக்கியுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட் குறிப்பிட்டார்
கல்முனையில்  இடம்பெற்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியின்  போது  பலர் உயிரையும் உடமையயும் தியாகம் செய்துள்ளார்கள் அவர்கள் வெறும் சுயலாபத்துக்காக  அத்தனையையும் தியாகம் செய்யவில்லை முஸ்லிங்களின் உரிமைகளை வாழவைக்க  இந்தக்  கட்சி வாழ வேண்டும் என நினைத்தே அந்த  தியாகங்களை மேற்கொண்டுள்ளார்கள்,

ஆகவே அவர்களின் தியாகங்களுக்கு  உண்மையான அர்த்தத்தை  கொடுக்க வேண்டி கட்டாயம் எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.இலங்கையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் இளைஞர்களுக்கும் இருக்கின்றது,மர்ஹும் அஷ்ரப் அவர்கள் கண்ட  நிம்மதியான சகல உரிமைகளுடனும் வாழும் முஸ்லிம் சமூகத்தை எமது தனித்துவத்துடன் தளைத்தோங்கச் செய்வதற்கான  பொறுப்பு  இளைஞர்களான உங்கள் கைகளில் தான் இருக்கின்றது,

மர்ஹும்  அஷ்ரப்  அவர்கள்  எந்த நோக்கத்தில்  கட்சியை  உருவாக்கினார்களோ அந்த நோக்கம் தற்போது  கைகூடும்  சாத்தியங்கள் உருவாகியுள்ளஇந்த நேரத்தில்  விளையாட்டுத் தனமாக இருந்து விட்டு  இறுதியில் கைசேதப்படுவதை விடுத்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுமையுள்ளதலைவரின்  கரங்களை  பலப்படுத்துவதே இந்த  சந்தரப்பத்தில் நாம்  செய்யும் மிகவும்  புத்திசாலித்தனமான  செயற்பாடாகும்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை  கொள்கையாலும் சேவைகளாலும்  வீழ்த்த  முடியாத பலர் இன்று  அவதூறுகளையும் பழி சுமத்தியும் கட்சியை வீழ்த்தி விடலாம் என கனவு கண்டு கொண்டு இருக்கின்றார்கள்.

இன்று  எமது கட்சித் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் பல இடங்களில் அபிவிருத்திப் பணிகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,பொத்துவிலிலேயே 160 மில்லியன் செலவிலே  ஹெட  ஒயா குடிநீர்திட்டம் மட்டுமன்றிகல்முனை,அட்டாளைச்சேனை,மட்டக்களப்பு,குருநாகல் ,பதுளை புத்தளம்  என சொல்லிக் கொண்டே போகலாம் பல இடங்களில் தலைவரின் நிதியில்அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அது மட்டுமல்ல  எமது பிரதியமைச்சர்களான  ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் அவர்களின் அமைச்சுக்களுக்கூடாகவும் நிதியொதுக்கீடுகள்முன்னெடுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன,இவர்கள் எல்லாம் தமது  சொந்தக்காரர்களுக்கும் சுயலாபங்களுக்காகவும்பயன்படுத்தப்படவில்லை,பாரபட்சமன்றி எம் சமூகத்துக்காக எம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதையே எம் கட்சி எமக்கு கற்றுத் தந்திருக்கின்றதுஎன்பதுடன் அதனையே  நாம் இப்போது  செய்து வருகின்றோம்.

ஆகவே  கடந்த காலங்களில்  பலருடைய சூழ்ச்சிகளினாலும் வஞ்சக வலைகளினால்  அன்றைய ஆட்சியாளர்களால கட்டப்பட்டிருந்த  எமது கட்சிஇன்று வீரியத்துடன் வெற்றி நடை போட்டு எமது மக்களுக்குத் தேவையான விடயங்களை  விரைவில்  செய்து முடித்துக் கொண்டு வருவதைப்பொறுக்க முடியாத நிலையில் வௌிநாட்டு சூழ்ச்சியாளர்களுடன் இணைந்து உள்நாட்டு நயவஞ்சகர்கள் இன்று சதிவலை பின்னுகின்றார்கள்.

சதிகாரர்களுக்கு எல்லாம் பெரும் சதிகாரனான அல்லாஹ் ஒருவனை மறந்து அவர்கள் சதி செய்து கொண்டிருக்கின்றார்கள்,இந்தக் கட்சியைஇதுவரை காலமும் பல சதிகளிலிருந்து  காப்பற்றிய இறைவன் இந்த சதிகாரர்களுக்கும் நல்லபாடத்தை கற்பிப்பான் என்பதை மிகத் தௌிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments