சீனாவில் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் பெரும்பாலான தம்பதியர் ஆண் குழந்தைகளை மட்டுமே தேர்வு செய்தனர்.
இதனால் சீனாவில் பெண்கள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இதன் விளைவாக சீனாவில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் அதிக வயதான போதும் திருமணமாகாமல் உள்ளனர்.
இந்நிலையில் செங் ஜியா ஜியா என்ற 31 வயது இளைஞர் ரோபோவை திருமணம் செய்துள்ளார். ரோபோ இன்ஜினியரான இவர் தான் விரும்பிய படி ரோபோ ஒன்றை உருவாக்கி அதனையே திருமணம் செய்துள்ளார்.
அந்த ரோபோவிற்கு இங் இங் என பெயரிட்டுள்ளார். இந்த ரோபோ 30 கிலோ எடை கொண்டது. இதனால் சில வார்த்தைகள் பேச முடியும். நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும்.
0 Comments