Subscribe Us

header ads

தாய் மீது சுடு நீர் ஊற்றி சித்திரவதை செய்த மகள் கம்பஹா கொட்டலந்த பிரதேசத்தில் சம்பவம்


தாய் மீது சுடு நீர் ஊற்றி சித்திரவதை செய்த மகள் ஒருவர் கம்பஹா – பல்லேவெல – கொட்டலந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் பட்டதாரி என தெரியவந்துள்ளது.
73 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரே இவ்வாறு தனது மகளால் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அவர் வத்துபிட்டிய மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மகளை கைது செய்ய சென்ற போது வீட்டின் கதவு உள்பக்கமாக மூடப்பட்டிருந்ததால் அவரை கைது செய்ய முடியாமல் போயுள்ளது.
பின்னர் மீண்டும் அவரை கைது செய்வதற்காக காவற்துறையினர் வீட்டுக்கு வந்த போது, குறித்த பெண்ணின் சகோதரன், அவரின் தந்தையை அறையொன்றில் அடைத்து வைத்து கைது செய்ய வேண்டாம் என காவற்துறைக்கு அறிவித்துள்ளார்.
மகன் கூரியு ஆயுதமொன்றை கொண்டு தமது தந்தையை பணயக்கைதியாக வைத்திருந்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.
பின்னர் காவற்துறையினர் சகோதரனையும், சகோதரியையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இந்த மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments