Subscribe Us

header ads

இலங்கையில் Rolls Royce Wraith வாகனம் பொலீஸாரால் மடக்கி பிடிப்பு


இலங்கைக்கு இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட அதிக விலையுடனான Rolls Royce Wraith வாகனம் தொடர்பில் கடந்த காலங்களில் அதிகம் ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது.
இந்த வாகனம் மெல்வா கூட்டு வர்த்தகத்தின் உரிமையாளரினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் சகலரும் அறிந்துள்ளனர். இதன் பெறுமதி 158 மில்லியன் ரூபாய் ஆகும்.
வெளிநாடொன்றிலிருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட இந்த வாகனம், துறைமுகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படும் வரையில் பிரபலமாக பேசப்பட்டது.
தற்போது மீண்டும் Rolls Royce Wraith வாகனம் குறித்து சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
குருணாகல் நகரத்திற்கு அருகில் இந்த Rolls Royce வாகனம் நிறுத்தப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
சட்டம் அனைவருக்கும் சமம் என்பது பொலிஸ் அதிகாரி கடமை மேற்கொள்ளும் முறையில் தெளிவாகியுள்ளது. எனினும் இந்த வாகனத்திற்கு தண்டப்பத்திரம் வழங்குவதற்கே வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments