வாட்ஸ்-அப் செயலியின் வாயிலாக பெண்களின் புகைப்படங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி விபசாரம் செய்து வந்த 45 வயது தாராவை காசியாபாத் போலீசார் கைது செய்து உள்ளனர். போலீஸ் அதிகாரிகளின் தகவலின்படி சாலிமார் கார்டனில் உள்ள பிளாட்டில் தங்கியிருந்து பாலியல் தொழிலை செய்து வந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாட்ஸ் – அப்பில் குரூப் ஒன்றை தொடங்கி மூன்று வருடங்களாக அதன் வாயிலாக வாடிக்கையாளர்களை சேர்த்து உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தாரா என்ற மஞ்சு அவருடைய ஆண் உதவியாளர் ராஜீவ் சைதியுடன் கைது செய்யப்பட்டார். அவர்களுடன் டெல்லி அசோக் விகார் பகுதியை சேர்ந்த இருவரும் சிக்கிஉள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, விபசாரத்தில் வலுக்கட்டாயமாக தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தாராவை அடையாளம் கண்டனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி தாராதான் என விசாரணையில் தெரியவந்ததும், தீவிரமாக கண்காணித்து வந்த போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தாரா பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது என உள்ளூர் அதிகாரி அனுப் சிங் கூறிஉள்ளார்.
வாட்ஸ்-அப்பில் டெல்லியை மூன்றாக பிரித்து வாடிக்கையாளர்களுக்காக தனித்தனியாக மூன்று குரூப்பை உருவாக்கி தாரா இயக்கி வந்ததும் தெரியவந்து உள்ளது, விசாரணை தொடர்பாக போலீசார் தாராவின் செல்போன்களையும் பறிமுதல் செய்து உள்ளனர். ஒவ்வொரு குரூப்பிலும் சுமார் 60 முதல் 100 வரையிலான வாடிக்கையாளர்களை தாரா இணைத்து உள்ளார் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீஸ் தேடி வருகிறது. 8 வருடங்களாக விபசாரம் செய்து வந்த தாரா கடந்த மூன்று வருடங்களாக வாட்ஸ் அப்பில் செயல்பட்டு வந்து உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஷாமிலி சென்றபோது மார்ச் 4-ம் தேதி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். இதனையடுத்து போலீசிடம் புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


0 Comments