Subscribe Us

header ads

இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துக்கள் - பேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கை

பாக்கிஸ்தான் அரசின் வேண்டுகோளை ஏற்று, இஸ்லாம் மதத்திற்கு எதிராக பேஸ்புக் தளத்தில் உலவிக்கொண்டிருந்த தரவுகளில், 85 சதவீதம் நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்றில், சமூக வளைத்தளங்களில் இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு எதிராக உளாவிக்கொண்டிருக்கும் தகவல்களை முடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முடியாத பட்சத்தில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களை, பாகிஸ்தானில் தடை செய்ய வேண்டும் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், இஸ்லாம் மதத்திற்கு எதிராக உலவிக் கொண்டிருக்கும் தரவுகளை நீக்குவதாக, பேஸ்புக்கிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தது.

இதை ஏற்றுக்கொண்ட அந்நிறுவனம், 85 சதவீத தரவுகள் நீக்கிவிட்டதாகவும், மீதமுள்ள தகவல்களையும் நீக்க, பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இஸ்லாத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிடும் பக்கங்களை முடக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும், இவ்வாறான கருத்துகளை வெளியிட்ட 3 நபர்களை கைது செய்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments