Mohamed Nizous
எல்லோரும் முப்தியே
யாவரும் 'அரி'ஞ்சரே
சொல்லுகிறார் பத்வா
அல்லாமா முல்லாவாய்.
ஆட்டோ பார்க் முப்தி
அண்ட்றொய்ட் சற் முப்தி
போட்டுத் தாக்கி வழங்கும்
பொலிடிக்கல் மேடை முப்தி.
எங்கோ படித்த தீர்ப்பை
எக்குத் தப்பாய் புரிந்து கொண்டு
எங்களுக்கும் தெரியுமென்று
எடுத்து விடும் fb முப்தி
ஜமாஅத்துக்கே வரமாட்டார்.
ஜாமமெல்லாம் விழித்திருந்து
இமாமுக்கே பத்வா கொடுக்கும்
இண்ஸ்டண்ட் முப்தீக்கள்
நாடறிந்த அறிஞர் பெயரை
நாறடித்துப் பேர் எடுக்க
தேடிப் பார்த்து பிழை பிடிக்கும்
தில்லாலங்கடி முப்தீக்கள்
நின்று குடிக்கின்றாய்
நீயெல்லாம் அறிஞரா?
என்று கேட்பார் fb முப்தி
இவர் அறியார் விதி விலக்கு
விதி இருக்கு விலக்கிருக்கு
எது பொருந்தும் எனப் பார்த்து
பதில் கொடுக்கும் பத்வாக் கலையை
பாடாய்ப் படுத்துகிறார்.
போண்டாவும் டீயுமில்லை
பொடுபோக்குத் தனம் செய்ய
ஆண்டவனின் கட்டளைகள்
சீண்ட வேண்டாம் சிறுபிள்ளையாய்.
எல்லோரும் பொதுவாய்
ஏற்றிருக்கும் விடயங்களை
சொல்லுவதில் தப்பில்லை
சுயமாக கொள்கை வகுத்து
அள்ளிவிடும் பத்வாக்களில்
அவதானம் அதிகம் தேவை.
0 Comments