Subscribe Us

header ads

இப்படியும் ஒரு வைத்தியரா! நோயாளிகளுக்காக கழிவறைகளை சுத்தம் செய்யும் இலங்கை வைத்தியர்!

இலங்கையில் நோயாளிகள் மரணிக்கும் நிலையில் உள்ள போதிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் வைத்தியர்களே அதிகம் உள்ளனர்.
எனினும் மனிதாபிமானமிக்க வித்தியாசமான வைத்தியர் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.
பலங்கொடை பகுதியை ஏ.டீ.சுதர்ஷன என்ற வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் அரசாங்க வைத்தியசாலையில், மலசலக்கூட பகுதி சுத்தமாக இருப்பது குறைவு.
இந்நிலையில் குறித்த வைத்தியர் தான் சேவை செய்யும் வைத்தியசாலையின் கழிவறைகளை தானே சுத்தம் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது நோயாளிகளின் சுத்தம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த வைத்தியர் சுகாதார அமைச்சின் பிரதி இயக்குனராக செயற்படுவதாக தெரிய வருகிறது.


Post a Comment

0 Comments