அண்மைக்காலமாக புத்தளத்தில் குறும்பட இயக்கங்களில் சாதனை படைத்து வரும் பிரபலமான இளம் இயக்குனர் ஒருவரை. கற்பிட்டியின் குரல் நான் பகுதியின் மூலம் அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். அந்த வகையில் இலங்கை புத்தளத்தை சேர்ந்த இளம் ஆண் இயக்குனரும் 'London Eagle' பனிப்பாளருமான கஜானந்தா சர்மா.
கேள்வி : உங்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் தாருங்கள் ?
( பெயர் , ஊர் , படிப்பு , வேலை )
பதில் : நான் கஜானந்த சர்மா. யாழ் கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்டவன். தற்போது புத்தளம் நகரில் வாழ்ந்து வருகிறேன். க.பொ.த உயர்தர பரீட்சையை முடித்துவிட்டு பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கிறேன்.
கேள்வி : குறும்படம் இயக்கும் ஆர்வம் எப்போது தோன்றியது?
பதில் : 2010 ஆம் ஆண்டு நான் தரம் 9 இல் கல்வி பயின்றுகொண்டிருந்த போது
கேள்வி : உங்களை குறும்படம் இயக்க தூண்டிய ஒரு காரணி ?
பதில் : 2010 ஆம் ஆண்டு வெளியாகிய கொழும்பு வாழ் சகோதரர்களின் ஓர் எளிமையான குறுந்திரைப்படம்.
கேள்வி : நீங்கள் இயக்கிய மற்றும் இயக்க முற்பட்ட முதல் குறும்படம் ஞாபகம் இருக்கிறதா? அப்படி இருந்தால் அதைப்பற்றி சிறிது விளக்கம்?
பதில் : 2010 ஆம் ஆண்டில் "தென்னவன் காடு" எனும் ஓர் குறுந்திரைப்படத்தை எனது நட்புக்களுடன் இணைந்து உருவாக்க முற்பட்டேன். இருந்தபோதும் சில காரணங்களால் அது நிறைவேறாமல் போனது. நீண்ட நாட்களின் பின் 2015 ஆம் ஆண்டு முதன்முறையாக எனது இயக்கத்தில் "வேற்றுப்பாதை" எனும் குறுந்திரைப்படம் வெற்றிகரமாக வெளிவந்தது.
கேள்வி : உங்கள் குறும்படத்தை பார்த்து முதலில் நன்றாக இருக்கின்றது என பாராட்டியது யார் ?
பதில் : என்னை முழுமையாக புரிந்து கொண்ட என் பெற்றோர்கள்.
கேள்வி : உங்களுக்கு எப்டியான குறும்படங்கள் இயக்க பிடிக்கும்?
பதில்: சமூக விழிப்புணர்வை உருவாக்கும்படியான குறுந்திரைப்படங்களுக்கே எனது முன்னுரிமை. எனினும் மாறுபட்ட கதைகளை இயக்கவும் தயங்கமாட்டேன்.
கேள்வி : நீங்கள் எழுதிய குறும்படங்களுக்காக எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த கதை ஏதாவது (நேயர்களுக்காக)?
பதில் : எனது இயக்கத்தில் வெளியாகிய "முதலியம்" .
கேள்வி : உங்கள் குறும்படங்களுக்கு கிடைத்த மிக பெரிய பாராட்டு அல்லதுபரிசு?
பதில் : என்னை கேளிக்கை செய்தோரின் பாராட்டுக்கள்.
கேள்வி : குறும்படங்களுக்கென கதைகள் எழுதுவதற்கு குறித்த நேரம் வைத்துள்ளீர்களா ? அல்லது தோன்றும் போது குறித்து வைத்துக் கொள்வீர்களா ?
பதில் : பெரும்பாலும் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் போதே கதைகள் மனதில் தோன்றும் அந்த நேரத்தில் என்னோடு துணை வரும் நாள் குறிப்பேட்டில் பதிந்து கொள்வேன்.
கேள்வி : இக்கலைப் பயணத்தில் உங்களைப் பாதித்த இயக்குனர்கள் (தமிழில்) யார்? ஆ தர்சம் (inspiration) என்று சொல்லுமளவு யாரேனும் ? Any Foreign Directors ?
பதில் : இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் இயக்குனர் A.R.முருகதாஸ்
கேள்வி : சமகாலக் இயக்குனர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள்?
பதில் : இயக்குனர் அட்லீ , இயக்குனர் Alphonse Puthren (ப்ரேமம்) மற்றும் இயக்குனர் சுதா கே பிரசாத் (இறுதிச்சுற்று) ஆகியோர்.
கேள்வி : 'குறும்படங்களுக்கான கருவை (கதை) நீங்கள் முன் கூட்டியே திட்டமிடுவதில்லை; என நான் நன்கு அறிவேன் அது மட்டுமல்லாமல் உடனுக்குடன் இதை இப்படி செய்தால் நன்றாக இருக்கும் என தீர்வின் அனுபவத்தை எப்படி பெற்றீர்கள் ?
பதில் : குறுந்திரைப்படங்கள் மீதான ஆர்வம் மற்றும் பல்வேறுபட்ட திரைப்படங்களை பார்த்ததன் மூலமான அனுபவம்.
கேள்வி : உங்களுக்கு சினிமாவில் இயக்குனர் ஆகும் சந்தர்பம் வந்தால் என்ன செய்வீர்கள்?
பதில் : மக்கள் மனதில் பதியும்படியான ஓர் திரைப்படத்தை இயக்க முற்படுவேன்.
கேள்வி : உங்கள் குறும்படங்கள் கொண்டு நீங்கள் மாற்ற அல்லது சாதிக்க விரும்புவது ?
பதில் : வாசிப்பு பழக்கம் குறைந்துவரும் இக்காலத்தில் குறுந்திரைப்படங்கள் மூலமாக மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்துவதையே நோக்காக கொண்டுள்ளேன்.
கேள்வி : வாழ்கையின் இலக்கு என்ன?
பதில் : என்றும் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் மற்றவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும்.
கேள்வி : இத்துறையில் சாதிக்கவிரும்பும் இளம் வயதினருக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்?
பதில் : ஆரம்பத்தில் இத்துறையில் அடியெடுத்து வைக்கும் பொது பல்வேறு விமர்சனங்களை சந்தித்தேன். எனினும் குறுந்திரைப்படங்கள் மீதான என் ஆர்வம் அவற்றை புறம்தள்ளியது.
அதே போல் நீங்களும் பல விமர்சனங்களை சமூகத்திடம் இருந்து பரிசாக பெறுவீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவற்றை தகர்தெரியும்படியான படைப்புக்களை சமூத்துக்கு நீங்கள் பரிசளியுங்கள்.
கேள்வி : உங்கள் அடைவுகளுக்கு குடும்பத்தினர் எவ்வாறு ஊக்கம்அளித்தனர்.
பதில் : என்றும் எப்போதும் அவர்களே என்னை ஊக்கப்படுத்துகின்றனர். அவர்களே என் முதன்மை ரசிகர்கள்.
கேள்வி : இளம் வயதில் சிலஅடைவுகளை தொட்டுவிட்டீர்கள். இதற்கு திறமை தவிர வேறு எது காரணங்கள் இருக்கின்றனவா?
பதில் : இறையருள் மட்டுமின்றி ஏற்கனவே குறிப்பிட்டது போல என் குடும்பத்தார் மற்றும் என் நண்பர்கள் ஆகியோரின் ஆதரவும் என் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
கேள்வி : இலங்கைக் கலைஞர்களை இலங்கை இரசிகர்கள், வாசகர்கள் வரவேற்பளிப்பதில்லை என்ற விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?
பதில் : சிறந்த படைப்புகளுக்கு மக்கள் என்றும் ஆதரவளிப்பர்.
நன்றி
குறிப்பு : நேர்காணலின் தொகுப்பு கற்பிட்டியின் குரல் நிருபர் (Mohamed Jeezan)
0 Comments