Subscribe Us

header ads

புத்தளம், ஹிஜ்ராத்புரம் கிராமத்தின் பின்பகுதியில் நூறு வீட்டுத்திட்டத்திற்கு அருகில் விளையாட்டு மைதானம் (படங்கள் இணைப்பு)


புத்தளம், ஹிஜ்ராத்புரம் கிராமத்தின் பின்பகுதியில் நூறு வீட்டுத்திட்டத்திற்கு அருகில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக புதிய காணி ஒன்றை பெற்று அதனை மைதானத்துக்கு ஏற்ற வகையில் புனரமைப்பு பணிகளை யாழ் முஸ்லிம் விளையாட்டு கழகம் மேற்கொண்டு வருகின்றது 


வளர்ந்து வரும் இளைஞர் சமுதாயம் போதைவஸ்து மற்றும் தீய பழக்கங்களில் இருந்து விடுபற்று விளையாட்டின் மூலம் நல்லதோர் பிரஜைகளாக நமது சமூகத்திற்கும் நாட்டுக்கும் நற்பணியாற்றும் வாலிபர்களை உருவாக்கும் உயர்ந்த நோக்கோடு இப்பணி முன்னெடுக்கப்படுவதாக யாழ் முஸ்லிம் விளையாட்டு கழகத்தினர் தெரிவித்தனர் .



இன்று அதிகாலையில் இருந்து நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளில் யாழ் முஸ்லிம் விளையாட்டு கழக வீரர்கள், முன்னால் வீரர்கள், அபிமானிகள், அயல் கிராம இளைஞர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், சிறுவர்கள் என பலரும் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் .



இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் கண்காட்சி போட்டி ஒன்றை இம்மைதானத்தில் நடாத்தி விமர்சையாக திறந்து வைத்து இளைஞர்களுக்கான விளையாட்டு பயிற்சிகளும் நடைபெறவுள்ளதாக யாழ் முஸ்லிம் விளையாட்டு கழகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கின்றது.

-Manafdeen-

















Post a Comment

0 Comments