Subscribe Us

விழித்தெழு புத்தளமே... ACMC புத்தளம் கிளை ஏற்பாட்டில் எதிர்வரும் 27.11.2016 அன்று புத்தளத்தில்


மென்மையான போக்குகள் , அதிரடியான அபிவிருத்திகள் , திட்டமிட்ட காய் நகர்த்தல் , எதனையும் அலட்டாத கொள்கை , தெளிவான பாதை , தூரநோக்கான இலக்கு , அனைவரையும் அணுசரிக்கும் பண்பு , பிரச்சினைகளின் போது களமிறங்கும் துணிவு , இப்படி பல நல்ல அம்சங்களை தன்னகத்தே கொண்டதாலோ என்னவோ கட்சி ஆரம்பித்து 12 வருடத்திற்குள் மக்களின் மனதில் வேகமாக இடம்பிடித்து வருகிறார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் , வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீன் அவர்கள் .
அவரின் வழிகாட்டலில் எதிர்வரும் 27.11.2016 அன்று புத்தளத்தில் மாபெரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன .
இதற்கான நெறிப்படுத்தலை புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான அல்ஹாஜ் M.H.M. நவவி அவர்களும் , புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் தொழிலதிபர் A.R.M.அலி சப்ரி அவர்களும் , கல்பிட்டி பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான S. ஆப்தீன் எஹியா அவர்களும் ஒழுங்கு படுத்தி உள்ளனர் .
''புத்தளமே விழித்தெழு'' எனும் தாரக மந்திரத்தோடு இடம்பெறும் இந்த நிகழ்வு காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை வரை தொடர்கிறது .
*காலை 8.00 மணிக்கு ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரிக்கு சுற்றி மதில் அமைக்க அடிக்கல் நாட்டுதல் .
*காலை 9.00 மணிக்கு புத்தளம் 6ம் கட்டை (இஸ்மாயில் புரம்) பாதைக்கு அடிக்கல் வைத்தலும் கட்சி காரியாலயம் திறப்பு விழாவும் .
*காலை 10.30 மணிக்கு கருத்தீவு கிராமத்தின் ஆழ்கிணறு திறப்பு விழாவும் , கட்சி காரியாலயம் அமைத்தலும் .
*மதியம் 2.00 மணிக்கு சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது .
இதிலே கடந்த உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைகழகம் தெரிவான மாணவர்களும் , கடந்த சாதாரண தரப்பரீட்சையில் உயர் சித்தி அடைந்த மாணவர்களும் , கல்விக்கு தன்னை அர்ப்பணம் செய்தோரும் கௌரவிக்க படவுள்ளனர் . ஒரு அரசியல் கட்சி இவ்வாறான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து இருப்பது புத்தளத்தில் இதுவே முதல் சந்தர்ப்பம் ஆகும் .
இது தவிர்த்து நிகழ்ச்சி நிரலுக்குள் உட்படுத்த படாத சில நிகழ்வுகள் நடைபெற இருப்பதும் ஒரு விஷேட அம்சம் ஆகும் .
இன , மத பேதங்கள் , கட்சி வேறுபாடுகள் கடந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்த நிகழ்வு இன்று மக்களின் பேசு பொருளாக மாறி வருவதை காணக்கூடியதாய் இருக்கிறது .
இந்த ஆதரவின் வெளிப்பாடாக இன்று மாற்று கட்சியினரால் பல்வேறு வசைப்பாடல்களும் , வீண் பழிகளும் பரப்படுவதை காணமுடிகிறது என்று ஏற்பாட்டு குழுவினர் தெரிவிக்கின்றனர் .
எந்த வித ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் இடம்பெறவுள்ள ''புத்தளமே விழித்தெழு''எனும் மகுடம் பலரின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை .
உங்கள் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு அன்பாய் அழைக்கிறோம் .
தகவலுக்கும் மேலதிக விபரங்களுக்கும் -
M.A.M.IFLAL (B.A.Hons - Evnt Mngmnt, Maleysia)
071 332 2777

Post a Comment

1 Comments

  1. கடந்த பதினோராம் திகதி முஸ்லீம் காங்கிரசின் மக்கள் வெள்ளம் யாவரும் அறிந்த ஒன்றே எனவே புதிதா புத்தளம் அமைப்பாளரிடம் பணம் மற்றும் மோட்டார் பைக் களை பெற்ற ஒரு சில கூஜா தூக்கிகள் அமைச்சரை குஷி படுத்த செய்யும் ஏட்பாடுதான் இது எனவே மக்கள் கணக்கில் கொள்ளாது தத்தமது வேலைகளை பார்ப்பது நல்லது இவர்கள் கூட்டம் காட்ட நாம் என்ன பலிக்கடாவா??

    ReplyDelete