பாலாவி கல்பிட்டி பிரதான வீதியில் 35கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் குறிஞ்சிப்பிட்டியில் சாலை மறியல் போராட்டம்.
குறித்த பிரதேச மீனவர்கள் கண்டக்குளி பெருங்கடல் மீன்பிடி சங்கத்திலேயே தம்மை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மீன்பிடி லைலா வலை பாவனையை முற்றாக நிறுத்தும் படி போலிசாரும் கடல் பாதுகாப்பு பிரிவினரும் மீனவர்களை தொடர்ந்தும் தடை விதித்துவந்துள்ளனர், லைலா மீன்பிடி வலை உபயோகம் நிறுத்தப்பட வேண்டுமாயின் அதற்கு மாற்றீடான மீன்பிடி வலை ஒன்றை தமக்கு தருமாறு கோரியே இந்த சாலை மறியல் போராட்டம் இடம்பெறுகிறது.
நேற்று 20.10.2016 காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இப் போராட்டம்இன்று வரை தொடர்கிறது ஆனால் இதுவரையும் பொலிசார் தளத்தில் இருந்தும் எதுவித அக்கறையும் காட்டவில்லை என்பதோடு அரசில் தலைமைகள்யாரும் களத்துக்கு சமூகமளிக்கவில்லை என்பது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஊர் மக்கள் போக்குவரத்துப்பிரச்சினைக்கு ஆளாகி இருப்பதோடு வைத்தியர்கள் ஆசிரிய ர்கள் தத்தமது பணிகளை தொடர முடியாத நிலையில் உள்ளனர்
லைலா வலை பாவனை ஏன் தவிர்க்கப்படல் வேண்டும். இவ் வலை உபயோகத்தால் எதிர்காலத்தில் மீன் இனம்அருக வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகிறது.
0 Comments