Subscribe Us

header ads

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருக்கு கற்பிட்டியில் இருந்து ஒரு சங்கக்கார.....


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பிரதித்தலைவரும் இலங்கை சனநாயக குடியரசின் விளையாட்டு துறை பிரதி அமைச்சருமாகிய சட்டத்தரணி HMM ஹரீஸ் அவர்களுக்கு எமது பிரதேசத்தில் இன்று வரை எட்டாக்கனியாக காணப்படுகின்ற கடினப்பந்து கிரிக்கட் (HARDBALL CRICKET)  விளையாட்டு தொடர்பான பிரச்சினையினை எடுத்துக்காட்டுவதே எமது நோக்கமாகும். கௌரவ பிரதி அமைச்சர் அவர்களே  இலங்கை என்ற எம் தாயக பூமிக்கு உலகளாவிய ரீதியில் ஓர் அறிமுகத்தை எற்படுத்திய நிகழ்வே  1996 ம் ஆண்டு வென்றெடுக்கப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கட் வெற்றியாகும். ஆனால் துரதிஷ்டம் இன்னமும் எமது பிரதேச விளையாட்டு வீரர்கள் மென்பந்து (SOFTBALL)  கிரிக்கட்டிளே தான் அர்ஜுனவாகவும், ஜயசூர்யவாகவும், மலிங்கவாகவும் இருக்கிறார்களே தவிர கடினப்பந்தை வாழ்நாளில் ஒருதடவையேனும் தொட்டுப்பார்க்க முடியாதா என்ற ஏக்கத்திளே இருந்தார்கள் இன்னமும் இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி நாங்களும் சிறந்த முறையிளே பயிற்றுவிக்கப்பட்டு தேசிய அணியில் இடம்பிடித்து நாட்டிற்காக விளையாட வேண்டுமென எண்ணுவது தவறாயின் எங்களை இவ்விளையாட்டில் இருந்து ஓரங்கட்டுவது நியாயமாகும். ஏனையமாவட்ட மக்கள் இந்த நாட்டிற்க்கு ஆற்றுகின்ற பணியினைத்தானே நாங்களும் செய்கின்றொம், ஏனைய மாவட்ட வீரர்கள் அனுபவிக்கின்ற உரிமைகளை ஏன் எம்மால் அனுபவிக்க முடியவில்லை?  ஏன் எமது வீரர்களின் திறமையினை மாத்திரம் மென்பந்தோடு மட்டுப்படுவதற்க்கான சதித்திட்டம் அரங்கேற்றப்படுகிறது? எத்தனையோ தேசிய பாடசாலைகள்,எத்தனையோ உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுனர்கள்,  இருந்தும் எமது பிரதேசத்தில் இருந்து ஒரு சங்கக்காராவை கூட உருவாக்க முடியாமல் போனதை நினைத்துப்பார்க்கையில் இதயப்பந்து இயங்கமறுக்கிறது. உண்மையில் அவ்வாறான பின்னடைவிற்க்கு போதிய வளமின்மையும் அரசியல்வாதிகளின் திறனற்ற செயற்பாடுகளுமே  காரணமாக இருந்திருக்கும். எனவே முக்கியமான அமைச்சின் பிரதி அமைச்சராகும் பாக்கியத்தை இறைவன் உமக்கு அமானிதமாக தந்திருக்கிறான்.  புத்தள மாவட்டத்திற்கு முதல் முதல் தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தை தந்த உமது கட்சியை கடந்த 2015 பொதுத்தேர்தலில்  தோற்கடித்த மாவட்டம் என்பதற்காக எமது வீரர்களுக்கிருக்கின்ற திறமையினை தோற்கடித்து விடாதீர்கள். பல அதி திறமையான வீரர்களது திறமைகள் மலுங்கடிக்கப்படுகின்றநிலைக்கு வைத்திடுங்கள் முற்றுப்பள்ளி, உரிமைக்கோஷத்துடன் வந்ததே உமது கட்சி தேசிய அணியில் விளையாடுவதையும் உரிமையாகத்தான் நாம் பார்க்கிறோம். நீங்கள் ஆரம்பித்து வைக்கும் இப்பணி பல சங்கக்காராக்களை உருவாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். எம்மவர் என்பதற்காகவே உம்மிடம் உதவிக்கரம் ஏந்துகின்றோம். எனவே உடனே அமுலுக்குவரும் வகையில் எமது பிரதேச பாடசாலைகளிலேனும் கடினப்பந்து கிரிக்கட்டினை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய குறித்த விளையாட்டுக்கு தேவையான வளங்களையும் ஆலோசனைகளையும் வழங்க ஆவணம் செய்யுமாறு தாழ்மையாய் வேண்டி நிற்கின்றோம்.               
-Sifas Nazar B.A,REDG LLB.                                    
தலைவர்,    
உயர்கல்வி மாணவர் அமைப்பு, கற்பிட்டி

Post a Comment

0 Comments