Subscribe Us

header ads

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பெண்களைப் போன்ற குணவியல்புகள் கொண்டவர் - கீதா குமாரசிங்க விமர்சனம்


பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பெண்களைப் போன்ற குணவியல்புகள் கொண்டவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க விமர்சித்துள்ளார்.
காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
ரஞ்சன் ராமநாயக்க தன்னை ஆணாக காட்டிக் கொண்டாலும் அடிப்படையில் பெண்ணின் குணவியல்புகளைக் கொண்டவர்.
தற்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள மாயா திரைப்படத்தில் அரவாணியாக அவர் நடித்துள்ளார். உண்மையில் அது அவரது குணவியல்புக்கேற்ற கதாபாத்திரமாகும்.
கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்திருக்கும் ஒரே காரணத்திற்காக எங்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் தொடர்ந்தும் சுதந்திரக் கட்சிக்காரர்களாகவே இருக்கின்றோம்.
ஆனால் ஆளுங்கட்சியில் இருப்பவர்களைத் தான் சுதந்திரக் கட்சிக்காரர்களா? ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களா என்று புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது என்றும் கீதா குமாரசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments