Subscribe Us

header ads

இப்படியொரு ஸ்மார்ட்போன் சாத்தியமா? : மிரள வைக்கும் அம்சங்கள்


உலகிலேயே முதன்முறையாக 12GB ரெம்  மற்றும் 1TB ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென் பிரான்ஸிஸ்கோவை சேர்ந்த ‘டுரிங் ரோபாட்டிக்’ என்ற நிறுவனமே குறித்த ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேடன்ஸா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத சிறப்புகளும் பயன்களும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

4 சிம்களை பாவிக்கும் வசதி, 60 மெகா பிக்ஸல் கொண்ட கெமரா, 20 மெகா பிக்ஸல் கொண்ட செல்ஃபி கெமரா போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

இது தவிர இரண்டு பெட்டரிகளைக் கொண்டிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஸ்மார்ட்போன் 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இப்படி ஒரு ஸ்மார்ட்போன் சாத்தியப்படுமா என பலர் கேள்வி எழுப்பியுள்ளதுடன். இது ஒரு வதந்தியாகவே இருக்குமென கூறுகின்றனர்.

எனவே சற்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Post a Comment

0 Comments