Subscribe Us

header ads

உலக சனத்தொகையில் இரண்டாம் இடமான இந்தியாவில் தொடரும் அவலம் : ஒடிசாவில் கர்ப்பிணி மனைவியை சிகிச்சைக்காக தோள்பட்டையில் சுமந்து சென்ற கணவன்



ஒடிசாவில் கணவர் ஒருவர் கர்ப்பிணயாக இருக்கும் மனைவியை சிகிச்சைக்காக தோள்பட்டையில் சுமந்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாவட்டம் கன்ஷாரிகால கிராமத்தை சேர்நதவர் பங்காரி பிரஷ்க என்ற பெண். கர்ப்பிணியாக இருக்கும் பிரஷ்கவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
உடனே சுகாதார மையத்திற்கு அழைத்து செல்ல அங்கன்வாடி தொழிலாளர்கள் தொடர்ந்து 108 சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, இரண்டு மணிநேரம் கழித்து வந்த ஆம்புலன்ஸ் நோயாளி இருக்கும் இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் வந்துள்ளது.
இந்நிலையில், பங்காரி பிரஷ்க விசிக்கும் பகுதிக்கு ஆம்புலன்ஸ் வராததை அடுத்து, அவரின் கணவர் சம்பாரு பிரஷக் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் மனைவியைதோள்பட்டையில் சுமந்து சென்று ஆம்புலன்ஸில் ஏற்றியுள்ளார்.

இச்சம்பவம் புகைப்படத்துடன் வெளியாகி அம்மாநிலத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments