Subscribe Us

நாகவில்லு கிராமத்தில் மத்திய மருந்தகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு - படங்கள்

-Razeen Rasmin-

கிராமத்தில் மத்திய மருந்தகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புத்தளம் நாகவில் எருக்கலம்பிட்டி கிராமத்தில் புதிதாக நிருமாணிக்கப்படவுள்ள மத்திய மருந்தகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை வைபவரீதியாக இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச தலைவரும், ஆசிரயருமான ஏ.ரியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைஷல் காசிம், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், வடமாகாண சபை உறுப்பினர் ஹபீப் முஹம்மது ரயீஸ், புத்தளம் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மற்றும் தைக்கா மஸ்ஜிதுகளின் நிர்வாக சபைத் தலைவரும், சட்டத்தரணியுமான எம்.எம்.சபூர்தீன் , உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட மற்றும் பிரதேச அமைப்பாளர்கள், கட்சியின் போராளிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகளினால் புதிய மத்திய மருந்தகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதுடன், புத்தளம் எருக்கலம்பிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் பேஷ் இமாமும், தாருல் உஸ்வா மக்தப் அதிபருமான அஷ்ஷெய்க் என். அஸ்மீர் (உஸ்வி) விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்த்தினார்.










Post a Comment

0 Comments