கண்டியில் 14 வயது சிறுவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆதிவாசி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரின் முறைப்பாட்டிற்கு அமைய கண்டி பொலிஸ் நிலையத்தின் மகளீர் மற்றும் சிறுவர் பணியகத்தினர் குறித்த சந்தேகநபரான ஆதிவாசியை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சிறுவனுக்கும் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆதிவாசிக்கும் இடையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த காலப்பகுதிக்குள் இடைக்கிடையே சிறுவனை அவர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments