அன்புள்ள The Puttalam Times குழும அங்கத்தவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் .
8 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கான குர்ஆன் முரத்தல் போட்டி ஒன்றை நடாத்த The Puttalam Times நிர்வாகம் தீர்மானித்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம். இப்போட்டியில் பங்குபற்ற, உங்கள் பிள்ளைகள் அல்குர்ஆனின் 55ஆம் அத்தியாயத்திலுள்ள சூரா அர்ரஹ்மானின் முதல் 10 வசனங்களை மனனமிட்டு அழகாக ஓத வேண்டும். அதனை உங்கள் SMART PHONE களில் தெளிவாக Video செய்து சிறிய File எனின் 0772381286 என்ற Whatsapp இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும். பெரிய வீடியோ file எனின் CD ஒன்றில் அதனை பதிவு செய்து
M.T.R.Mohamed
37/32, Nahoor Masjid Lane,
Puttalam
என்ற முகவரிக்கு 31.08.2016 க்கு முன்னர் கிடைக்கும்படி தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
* முதல் பரிசு- ரூ.5000 பெறுமதியான Shamreen's Textile Gift Voucher
* இரண்டாம் பரிசு - ரூ.3000 பெறுமதியான Shamreen's Textile Gift Voucher
* மூன்றாம் பரிசு: ரூ.1000 பெறுமதியான Shamreen's Textile Gift Voucher
மற்றும் பங்குபற்றுவோருக்கு ஆறுதல் பரிசில்களும் காத்திருக்கின்றன.
கவனிக்க:
* Whatsapp மூலமாக வீடியோ பண்ணும் போது File இன் அளவு குறைவாகவும்,Whatsapp மூலமாகவே அனுப்பக்கூடியதாகவும் இருக்கும்.
* வீடியோவை அனுப்பும் போது (Whatsapp / CD ) பிள்ளையின் முழுப் பெயர், வயது, முகவரி, தொலைபேசி இல. என்பவற்றை தவறாது குறிப்பிடவும்.
போட்டி நிபந்தனைகள்:
* எட்டு வயதிற்கு குறைந்த, புத்தளம் பிரதேசத்தை (கரைத்தீவு, கற்பிட்டி, அக்கரைப்பற்று பிரதேசங்கள் உள்ளடங்களாக) சேர்ந்த பிள்ளையாக இருத்தல் வேண்டும்.
* தெளிவான Background இல், அசைவுகள் இன்றி Video பதிவை செய்திருக்க வேண்டும். (புள்ளிகள் வழங்கப்படும்)
* போட்டியாளர்கள் இஸ்லாமிய உடை (தொப்பி,ஸ்காப்f ) அணிந்திருக்க வேண்டும். (புள்ளிகள் வழங்கப்படும்)
* போட்டியாளரின் வயதை உறுதி செய்ய பிறப்புச் சான்றிதலின் தெளிவான Photo ஒன்று whatsapp மூலம் மேலே தரப்பட்ட இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
* போட்டி முடிவு திகதிக்கு (31/8/2016) பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
குறிப்பு : அங்கத்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பதிவு செய்த விடியோவை Whatsapp அல்லது CD இல் பதிந்து தபாலில் அனுப்புவதில் அனுப்புவதில் சிரமத்தை எதிர்நோக்குவோர், புத்தளம் போல்ஸ் வீதியில் அமைந்துள்ள iSoft நிறுவனத்தில் (பழைய Hafeel Nursing Home Building) தமது வீடியோக்களையும், பிள்ளையின் தகவல்களையும் வழங்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலதிக தகவல்களுக்கு: 0772381286
ஜெசாக்கல்லாஹு ஹைரன்
- The Puttalam Times நிர்வாகம் -
0 Comments